கோபியை தொட்ட எடப்பாடி பழனிசாமி.. 7 இடத்தில் டெபாசிட் காலி.. வேலூர் ஓட்டு நினைவிருக்கா? நறுக் பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிப் பாளையத்தில், அவரது செல்வாக்கை கரைக்கும் வேலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.. அதற்கேற்றவாறு, நீலகிரியில் பிரச்சாரம் செய்ய, கோபி வழியாக சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பிரமாண்ட வரவேற்பு அளித்துள்ளனர்.. ஆனால் கோபிக்கு எடப்பாடி வருவதை தெரிந்து கொண்ட செங்கோட்டையன் கோபியிலிருந்து முன்கூட்டியே கிளம்பி சென்னைக்கு சென்றுவிட்டாராம்.. இந்நிலையில், அதிமுக நிலைமை குறித்து மூத்த அரசியல் விமர்சகர் அய்யநாதன் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள அரசியல் விமர்சகர் அய்யநாதன், "கோபியில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, செங்கோட்டையன் தொகுதியிலேயே தனக்கு ஆதரவும், செல்வாக்கும் உள்ளது, தனக்கு எந்த எதிர்ப்பும் கோபியில் கிடையாது என்பதை காட்டுவதற்காகவே கோபி செட்டிப்பாளையத்தை "தொட்டார்" எடப்பாடி பழனிசாமி..

Edappadi Palanisamy Gopi Vellore

தனக்கு எதிராக யாராவது நின்றாலே, அவர்களது அரசியலை முடித்துவிட வேண்டும் என்று நினைப்பவர்.. போட்டி என்பதை எப்போதுமே எடப்பாடி விரும்பியதில்லை.. தனக்கு எதிராக யாரும் நிற்கவும்கூடாது, பேசவும் கூடாது என்ற மனப்பான்மை உள்ளதால்தான், அனைவரையும் இன்று எடப்பாடி பழனிசாமி பகைத்து கொண்டுள்ளார்..

டார்கெட் செய்யும் எடப்பாடி பழனிசாமி

சசிகலாதான் எடப்பாடியை கொண்டுவந்தார்.. ஆனால் முதலில் தூக்கி எறியப்பட்டதே சசிகலாதான்.. அப்படி தூக்கி எறியப்படும்போது பக்கத்தில் இருந்தது ஓபிஎஸ்.. உடனே பன்னீர்செல்வத்தையும் தூக்கிவிட்டார்.. பிறகு அவரது ஆதரவாளர்களையும் குறி வைத்து தூக்கிவிட்டார்.

இப்படி ஒவ்வொருவராக குறிவைத்து டார்கெட் செய்யும்போது, ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி பலவீனமாகிவிடுகிறது. ஒருவரை கட்சியிலிருந்து நீக்கினால், அவரை சுற்றி நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் இருப்பார்கள்.. இந்த நிர்வாகிகள் அந்தந்த பகுதியில் அதிமுகவின் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பார்கள்..

7 இடங்களில் டெபாசிட் காலி

எனவே கட்சியிலிருந்து ஒருவரை நீக்கும்போது, அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்களாக அனைத்தும் மாறிவிடுகிறது. இதுதான் அதிமுக ஓட்டுக்களை மிகப்பெரிய அளவில் பாதிக்க காரணம்.. இதன் விளைவுதான் 7 இடங்களில் அதிமுக டெபாசிட் காலி ஆனது.. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில்.. அதிலும் எங்கே இரட்டை இலை எங்கே பலமானதாக உள்ளதோ, அங்கேயே எடப்பாடி சறுக்கலை கண்டார்.

இரட்டை இலைக்கு எதிராக ஓபிஎஸ் தேர்தலில் நின்று மூன்றரை லட்சம் வாக்குகளை பெற்றார். இரட்டை இலைக்கு டிடிவி தினகரன் நின்று, இரண்டே முக்கால் லட்சம் ஓட்டுக்களை பெற்றார். இப்படி பிரிந்து சென்றவர்கள் பலரும் 1 லட்சத்துக்கும் ஓட்டுக்களை பெற்று, அதிமுக டெபாசிட்டையே இழந்துவிட்டது.

வேலூரிலும் மண்ணை கவ்விய அதிமுக

வட தமிழ்நாட்டிலும் வேலூரில் 10 சதவீதம் மட்டுமே வாங்கி டெபாசிட்டை இழந்தது இரட்டை இலை.. இதெல்லாம் ஏன் நடக்குது? கட்சிக்குள்ளிருப்பவர்களை எல்லாம் தூக்கிவிட்டு, தன்னுடைய இருப்பை மட்டும் பலப்படுத்தி கொள்ள நினைக்கிறார் எடப்பாடி..

இதற்காக தனக்கு வேண்டியவர்களை மட்டுமே பொறுப்புக்கு கொண்டு வருகிறார்.. பலமானவர்களை வெளியேற்றிவிட்டு, பலவீனமானவர்களை உள்ளே கொண்டுவந்தால், கட்சியின் பலமும் குறைந்துவிடுகிறது.

செங்கோட்டையன் ஏன் எதிரியானார்? செங்கோட்டையனின் ஒப்புதலை பெறாமலேயே, செங்கோட்டையனின் தொகுதியில், தன்னுடைய நபர்களை பொறுப்பில் அமர்த்தினார் எடப்பாடி பழனிசாமி.. இதனால்தான் முரண்பாடு ஏற்பட்டது..

100 சதவீதம் கூட்டப்பட்ட கூட்டம்

இப்போது செங்கோட்டையன், ஓபிஎஸ், தினகரன் ஆதரவாளர்கள் என அனைவருமே ஒன்றுசேர்ந்துவிட்டார்கள்.. இது எடப்பாடிக்கு பலவீனத்தையே தந்துள்ளது.. இதனை மூடி மறைக்கவே கோபியில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, கூட்டத்தை கூட்டினார்.. கோபியில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலுமே எடப்பாடிக்கு வருவது 100 சதவீதம் கூட்டப்பட்ட கூட்டம்தான்.

இந்த கூட்டத்தை வைத்து அவரது வெற்றியை நிர்ணயிக்க முடியாது, கட்சியில் பலமுடன் உள்ளார் என்றும் சொல்ல முடியாது. செங்கோட்டையன் இல்லாமலேயே எடப்பாடியால் செயல்பட முடியும் என்றாலும், வாக்கு விழ வேண்டுமே?" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+