எடப்பாடிக்கு லெப்ட் ஹேண்ட் ஆகும் விஜய்.. மொத்தமாக ஆட்டத்தை கலைங்க.. ஸ்டாலின் களமிறக்கிய பிளான் B
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் கூட்டணி செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது. இதற்கு பதிலடி தரும் விதமாக ஸ்டாலின் முக்கியமான பிளான் பி ஒன்றை களமிறக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரை மாநாட்டிலும், அதன்பின் நடந்த சுற்றுப்பயணங்களிலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். ஜெயலலிதாவின் கட்சி பாஜகவிதான் அடகு வைக்கப்பட்டுவிட்டதாக விமர்சனம் செய்து இருந்தார்.

இப்போது அதே விஜய் அதிமுகவின் உதவியை நாடி இருக்கிறார். அதோடு இல்லாமல்.. ஆந்திர பிரதேசத்தில் எப்படி சந்திராபாபு நாயுடுவுக்கு பவன் கல்யாண் வலது கை போல இருக்கிறாரோ அதே போல்தான் தமிழ்நாட்டில் விஜய் எடப்பாடிக்கு வலது கை போல உருவெடுப்பார் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். இதற்கான ஆலோசனைகள் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைகோர்க்கும் விஜய் எடப்பாடி
அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உடன் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் பரபரக்கும் சூழலில் கூட்டணி தொடர்பாக இன்று மக்கள் மத்தியில் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
போன் கால் பேச்சு
ஏற்கனவே எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த போன் காலில் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக வட்டாரம் நம்மிடம் பேசுகையில்.. கூட்டணிக்கு வருகிறீர்களா? என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். இதற்கு விஜய் நோ சொல்லவில்லை. நான் மக்களை சந்திக்க போகிறேன். மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க போகிறேன், என்று கூறியதாக தெரிவித்தனர்.
மேலும், பிரச்சாரத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திப்பதாகவும், ஜனவரி மாதத்திற்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்பதாகவும் விஜய் உறுதியளித்துள்ளார் என்று அதிமுக வட்டாரம் தெரிவித்து. இந்த அழைப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக அதிமுக வட்டாரம் தெரிவித்தது.
இந்த அழைப்பில், எடப்பாடி பழனிசாமி கரூர் சம்பவத்திற்கு தனிப்பட்ட வகையில் விஜயிடம் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு முழு ஆதரவையும் வழங்கினார் என்று கூறப்படுகிறது.
மேற்குப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு மூத்த அதிமுக தலைவர் இது பற்றி நம்மிடம் கூறுகையில், விஜய் எடப்பாடி பேசியது உண்மைதான். கூட்டணிக்கு வாருங்கள் என்று எடப்பாடி கூறினார். உங்களுக்கு முழு சப்போர்ட் கொடுக்கிறேன் என்று எடப்பாடி கூறினார். இதற்கு விஜய் பாசிட்டிவ்வாக பேசி உள்ளார். 2026 பொங்கலுக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார் என்று அந்த மூத்த அதிமுக தலைவர் தெரிவித்தார்.
ஸ்டாலின் பிளான் பி
இந்த நிலையில்தான் இந்த கூட்டணிக்கு பதிலடி தரும் விதமாக ஸ்டாலின் பிளான் பி ஒன்றை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். விஜய் அதிமுக உடன் இணைந்தால் கண்டிப்பாக அது திமுகவிற்கு எதிராக செல்லும். முதலில் இந்த கூட்டணி உருவாகாமல் தடுக்க வேண்டும். அதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்று திமுக திட்டமிட்டு வருகிறதாம்.
ஒருவேளை கூட்டணி உருவானால் அதற்கு பதிலடியாக திமுக பக்கம் சில பெரிய தலைகளை, சில பெரிய கட்சிகளை கொண்டு வரும் திட்டத்திலும், அரசியல் - வாக்கு வங்கி ரீதியாக இதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது உள்ளிட்ட பிளான் பிகளையும் ஸ்டாலின் களமிறக்கி உள்ளாராம். இந்த கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் ஸ்டாலின் அதற்கான முன்னெடுப்புகளை எடுப்பார் என்று திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications