Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் மோடியின் தாய் மறைவு.. தனித்தனி விமானத்தில் குஜராத் விரையும் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பென்னின் உயிர் இன்று அதிகாலை பிரிந்தது. குஜராத் மாநிலம் காந்தி நகரில் அவரது உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி உடலை தோளில் சுமந்து சென்று தகனம் செய்தார். இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு ஆறுதல் கூறி ஹீரா பென்னுக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி விமானங்களில் இன்று குஜராத் புறப்பட்டு செல்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பென் குஜராத் மாநிலம் காந்திநகர் அருகே ரேசன் எனும் பகுதியில் வசித்து வந்தார். பிரதமர் மோடியின் தம்பியான பங்கஜ் மோடியுடன், ஹீரா பென் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஹீராபென் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அகமதாபாதில் உள்ள யுஎன் மேத்தா இதய நோய் சிகிச்சை மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

பிரதமர் மோடியின் தாய் மறைவு

பிரதமர் மோடியின் தாய் மறைவு

இந்நிலையில் ஹீரா பென்னுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். ஹீரா பென்னின் உயிர் இன்று காலை 3.30 மணியளவில் மருத்துவமனையில் பிரிந்தது. அதன்பிறகு அவரது உடல் அவர் வசித்த வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி அறிந்தவுடன் பிரதமர் மோடி குஜராத் விரைந்து சென்றார்.

உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி

உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி

தாய் ஹீரா பென்னின் உடலை பார்த்து அவர் கண்கலங்கினார். மேலும் மலர் வளையம் வைத்து உடலின் முன்பு கும்பிட்டு விழுந்து கண் கலங்கினார். அதன்பிறகு ஹீரா பென்னின் இறுதி சடங்குகள் துவங்கியது. பிரதமர் மோடி உடலை தோளில் சுமந்து சென்று இறுதி சடங்குகள் செய்தார். அதன்பிறகு ஹீரா பென்னின் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு அஞ்சலி செலுத்த முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வரான ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுபற்றி எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி இன்று அதிகாலை காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்கள், பிரதமர் மோடியின் தாயின் ஆன்மா சாந்தியடைட்டும்'' என இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஓ பன்னீர் செல்வம் இரங்கல்

ஓ பன்னீர் செல்வம் இரங்கல்

இதேபோல் ஓ பன்னீர் செல்வமும் பிரதமர் மோடிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛இன்று உங்கள் அன்பு தாயார் ஹீராபென் மோடியின் மறைவு குறித்து அறிந்து வருந்தினேன். இத்தகைய சூழ்நிலையில் ஆறுதல் வார்த்தைகள் உண்மையில் போதுமானதாக இருக்காது என்றாலும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து துயரத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த கடுமையாக நேரத்தில் ஈடுசெய்ய முடியாத தாயாரின் இழப்பை தாங்கி கொள்ளும் வலிமையை உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இறைவன் வழங்க பிரார்த்திக்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்'' என தெரிவித்துள்ளார்.

தனித்தனி விமானத்தில் பயணம்

தனித்தனி விமானத்தில் பயணம்

இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகிய 2 பேரும் அகமதாபாத் சென்று ஹீரா பென்னுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். இவர்கள் 2 பேரின் இடையேயும் கட்சி விவகாரத்தில் பிரச்சனை உள்ள நிலையில் தனித்தனி விமானத்தில் அகமதாபாத் செல்ல உள்ளனர். அதன்படி எடப்பாடி பழனிச்சாமி தற்போது சொந்த ஊரான சேலத்தில் உள்ளார். இவர் கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து அகமதாபாத்துக்கு விமானத்தில் செல்ல உள்ளார். அதேபோல் ஓ பன்னீர் செல்வம் சென்னை விமான நிலையத்தில் இருந்து அகமதாபாத்துக்கு புறப்பட்டு செல்ல உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+