9 நாட்களுக்குப் பிறகு நேருக்கு நேராக.. ஒரே மேடையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்.. அன்னிக்கு கூட பார்க்கலயே..!
சென்னை : அதிமுக பொதுக்குழு மேடையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு நடுவில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்துள்ளார்.
Recommended Video
ஒற்றைத் தலைமை பிரச்சனைக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளாமலேயே இருந்து வந்தனர். இந்நிலையில், 9 நாட்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இன்று நேரடியாக ஒரே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பரபரப்பான சூழலில், பொதுக்குழு உறுப்பினர்களின் கூச்சல்களுக்கு மத்தியில் இன்று பொதுக்குழு கூடியிருக்கும் நிலையில், அரங்கிற்குள்ளும், வெளியேயும் பரபரப்பு நிலவுகிறது.

பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் தொடங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சற்று முன்னதாக பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார். முன்னதாகவே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் வந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மேடைக்கு செல்லாமல் தனி அறையில் காத்திருந்தார்.

மேடைக்கு வந்த இரட்டைத் தலைமை
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்காத நிலையில், எடப்பாடி பழனிசாமியை மூத்த நிர்வாகிகள் சென்று வரவேற்றனர். இதையடுத்து, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மேடைக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மேடைக்கு வந்தார். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.

அருகருகே அமராமல்
பொதுக்குழு நடைபெறும் மேடைக்கு வந்தார் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. அவரைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மேடைக்கு வந்தார். ஓ.பி.எஸ் - ஈபிஎஸ் இருவரும் அருகருகே அமராமல் ஒரு நாற்காலி இடைவெளி விட்டு அமர்ந்துள்ளனர். இருவருக்கும் நடுவே தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்துள்ளார்.

சந்தித்துக் கொள்ளவில்லை
கடந்த ஜூன் 14ஆம் தேதி பொதுக்குழுவுக்கு முன்னதாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தான் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் ஓ.பி.எஸ் மற்றும் ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஒருவரையொருவர் நேரடியாக சந்தித்துக் கொள்ளவில்லை.

9 நாட்களுக்குப் பிறகு
கடந்த 18ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று ஆலோசனையில் ஈடுபட்டபோதும், எடப்பாடி பழனிசாமி அங்கு வரவில்லை. இதனால், இருவரும், ஒற்றைத் தலைமை பிரச்சனைக்குப் பிறகு சந்தித்துக் கொள்ளாமலேயே இருந்து வந்தனர். இந்நிலையில், 9 நாட்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இன்று நேரடியாக ஒரே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
-
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications