எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணுங்க! கோபத்தின் உச்சிக்கே போன எடப்பாடி? வெளியான செங்கோட்டையனின் பழைய பைல்ஸ்
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்த செங்கோட்டையனின் பழைய பைல்ஸ் பல வெளியாக தொடங்கி உள்ளதாம்.
செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கைகளை வைத்தார். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் கூட கொடுத்திருந்தார். ஆனால் அவரின் காலக்கெடுவை எடப்பாடி பழனிசாமி ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.
10 நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறி இருந்தார். ஆனால் அதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து டெல்லிக்கு கூட சென்று அமித் ஷாவை சந்தித்து செங்கோட்டையன் முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

கட்சி மாறிய செங்கோட்டையன்
ஆனால் இந்த ஆலோசனைகள், சந்திப்புகள் எதுவும் செங்கோட்டையனுக்கு சாதகமாக செல்லவில்லை. செங்கோட்டையனுக்கு இது எதுவும் கைகொடுக்கவில்லை. இறுதியில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார். டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை தேவர் குரு பூஜையில் சந்தித்தார். இதன் விளைவாக அதிமுகவில் இருந்து உடனடியாக செங்கோட்டையன் தூக்கி அடிக்கப்பட்டார்.
இதையடுத்து தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் திடீரென தவெகவில் இணைந்துள்ளார்.
எடப்பாடி கோபம்
இப்படிப்பட்ட நிலையில் எங்கே எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் பழைய பைல்ஸ் எல்லாம் வெளியிட தொடங்கி உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த அளவிற்கு செங்கோட்டையனுக்கு எதிரான பழைய ஆவணங்கள், புகார்கள் பல வெளியாக தொடங்கி உள்ளன.
இத்தனை நாட்கள் அவர் அதிமுகவில் இருந்த போது வைக்கப்படாத குற்றச்சாட்டுகள் தற்போது வேகம் எடுத்து உள்ளன. 30 வருட பழைய புகார்கள் கூட மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளன.
செங்கோட்டையனின் பழைய பைல்ஸ்
அதன்படி செங்கோட்டையன் மீது முன்பு வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டுகள் வெளிச்சம் அடைய தொடங்கி உள்ளன. உதாரணமாக வாச்சாத்தி காலங்களில் அவர் மீது வைக்கப்பட்ட புகார்கள் மீண்டும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வடிவத்தில் வெளியாக தொடங்கி உள்ளன. இன்னொரு பக்கம் 2000 ஆம் ஆண்டில், செங்கோட்டையன் இரண்டு வெவ்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்படும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
இந்த செய்தியும் தற்போது மீண்டும் தீயாக பரவ தொடங்கி உள்ளன. 20-30 ஆண்டு பழைய பைல்ஸ் எல்லாம் மீண்டும் கிளறப்பட்டு வருகின்றன.
செங்கோட்டையன் செயலால் கோபம்
எடப்பாடி செங்கோட்டையன் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. செங்கோட்டையன் திமுகவில் இணைந்திருந்தால் கூட அவரை துரோகி என்று அதிமுக விமர்சனம் செய்திருக்கும். ஆனால் அவர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துவிட்டார்.
இதனால் இனி தமிழக வெற்றிக்கழகம் உடன் எடப்பாடி கூட்டணி வைக்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்தே அவரின் பழைய பைல்ஸ் எல்லாம் கிளறப்படுவதாக ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் இதை எல்லாம் கிளறுவதே திமுகதான்.. தங்கள் கட்சிக்கு செங்கோட்டையன் வராத கோபத்தில் இப்படி செய்கிறார்கள் என்றும் வாதம் வைக்கப்படுகிறது.
எது எப்படியோ தலைவலி என்னவோ செங்கோட்டையனுக்கும்.. அவரின் "அண்ணன்" விஜய்க்கும்தான்!
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications