சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காழ்ப்புணர்ச்சி! மக்கள் மீது அக்கறையில்லா திமுக அரசு.. உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுத்த எடப்பாடி

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஏற்படும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க கூனிமேடு கிராமத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்தத் திட்டத்தின் கட்டுமான பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது.

’பச்சை ஆரஞ்ச் சிகப்பு’ முதல்வர் டேபிளுக்கு போன மா.செ.கள் பட்டியல்! இத்தனை பேர் நீக்கமா? பரபர திமுக!’பச்சை ஆரஞ்ச் சிகப்பு’ முதல்வர் டேபிளுக்கு போன மா.செ.கள் பட்டியல்! இத்தனை பேர் நீக்கமா? பரபர திமுக!

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இந்த விவகாரத்தை இப்போது கையில் எடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதாகவும் மக்களுக்குப் பெரியளவில் உதவும் இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

 கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டி, பல ஆண்டுக்கால கோரிக்கையை எனது தலைமையிலான அரசு கனிவுடன் ஆய்வுசெய்து, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து தினமும் 60 எம்எல்டி கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைத்து, அதன்மூலம் விழுப்புரம் நகராட்சி, திண்டிவனம் நகராட்சி, விக்கிரவாண்டி பேரூராட்சி, மரக்காணம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளை 692 கிராம குடியிருப்புகளுக்கும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் மற்றும் திண்டிவனம் சிப்காட்டுக்கும், தினந்தோறும் கடல் நீரைக் குடிநீராக்கி வழங்கும் 1502.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு, ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

 காழ்ப்பு காழ்ப்புணர்ச்சி ணர்ச்சி

காழ்ப்பு காழ்ப்புணர்ச்சி ணர்ச்சி

ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை சிறிதளவும் இல்லாமல், அதிமுக அரசால் தொடங்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தைக் கைவிட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய விவசாயிகள் நிறைந்த மாவட்டங்களாகும். ஏற்கெனவே, இந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா பல்கலைக்கழகத்தை மூடியதன் மூலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பை திமுக அரசு பறித்தது. இப்பொழுது, இந்த திமுக அரசு ஏழை, எளிய மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதையும் பறித்துள்ளது.

 போராட்டம்

போராட்டம்

ஜெயலலிதா அரசால் அடிக்கல் நாட்டப்பட்ட, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என்றும்; இதற்குத் தேவையான நிதியினை உடனடியாக விடுவித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கட்சி சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகம், தலைமையில் 27.08.2022 - சனிக் கிழமை காலை 9 மணிமுதல், திண்டிவனம் காந்தி சிலை அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

 அழைப்பு

அழைப்பு

மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சி உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே போல், மகளிர் உள்ளிட்ட பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Edappadi Palanisamy slams DMK govt for halting dmk govt project: (உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்த எடப்பாடி பழனிசாமி) ADMK hunger strike protest against DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X