எடப்பாடி கேட்ட ஒரு கேள்வி.. டேட்டாவோடு சிவசங்கர் தந்த "நச்" பதிலடி.. தமிழ்நாட்டிற்கு குஷியோ குஷி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார்.

மக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிதி பற்றாக்குறை என்ற பல்லவியை பாடாமல் கடன் வாங்கிய மூன்றரை லட்சம் கோடியில் புதிய பேருந்துகள் உடனடியாக வாங்கவும்; பழுதடைந்த பேருந்துகளை பழுதுபார்க்கவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்து இருந்தார்.

Edappadi Palanisamy asks about induction of new buses Minister Sivasankar replies with data

இதற்கு அமைச்சர் சிவசங்கர் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அதில், 791 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன என்றுள்ளார். மேலும் திமுக ஆட்சியில் இதுவரை 791 புதிய பேருந்துகளும் 858 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன 1,000 மின்சாரப் பேருந்துகள் உள்பட 8,682 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை; 2024 - 25 இறுதிக்குள் சுமார் 8,000 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

புதிய பேருந்துகள்: சென்னை, மதுரை மற்றும் கோவையில் அல்ட்ரா மாடல் ஸ்டைல் கொண்ட புதிய லோ ப்ளோர் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. சென்னையில் இதன் சோதனை ஓட்டம் நடக்கும் நிலையில் தற்போது மதுரையிலும் சோதனைகள் நடக்கின்றன.

மதுரையில் சோதனை செய்யப்படும் இந்த பேருந்துகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

சென்னை, மதுரை மற்றும் கோவையில் நகரத்தில் உள்ள பயணிகள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள், விரைவில் பயணம் செய்ய மிகவும் எளிதாக இருக்கும், வரும் மாதங்களில் 552 தாழ்தள, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் உள்ள பேருந்துகளை பெருநகர போக்குவரத்துக் கழகம் பெற உள்ளது.

இந்த வாகனங்கள் ஜெர்மன் அபிவிருத்தி வங்கியின் (KfW) நிதியுதவியின் கீழ் வாங்கப்படும் பேருந்துகளின் லிஸ்ட் ஆகும். தமிழ்நாட்டில் அதிக அளவில் பேருந்துகள் வாங்கப்பட்டு வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

MTC தவிர, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கு தலா 100 தாழ்தள பேருந்துகளை இதே ஒப்பந்த முறைப்படி வாங்க உள்ளது. முழுமையாக கட்டப்பட்ட 552 தாழ்தளப் பேருந்துகளை வாங்குவதற்கான செயல்முறை இறுதி கட்டத்தில் உள்ளது, ஒரு வாரத்தில் KfW அதன் அனுமதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தொடக்கத்தில், 442 தாழ்தளப் பேருந்துகளை வாங்குவதற்கு ஏலம் எடுத்தது. மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான தாழ்தளப் பேருந்துகளை வாங்குவது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, டெண்டர் நிபந்தனைகளைப் பயன்படுத்தி, லோ-ஃப்ளோர் பேருந்துகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் அதிகரித்து 552 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது.

புகைப்படங்கள்: இந்த பேருந்துகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. வெள்ளை நிறத்தில் முன் பக்கத்திலும், நடுவிலும் ஆட்டோமெட்டிக் டோர்கள் வைக்கப்பட்டு முழுக்க முழுக்க ஏசியோடு, ஏசி இல்லாமலும் இந்த பேருந்துகள் வாங்கப்படுகின்றன.

அதோடு புதிதாக டெண்டர் விடுவதைத் தவிர்க்கவும் முடிவு செய்தது. மொத்தம் உள்ள 1,107 பேருந்துகளில் தரமான தரைப் பேருந்துகளின் எண்ணிக்கையை 950 ஆகக் கட்டுப்படுத்தவும், 157 தாழ்தளப் பேருந்துகளை தனி டெண்டர் மூலம் வாங்கவும் நீதிமன்றம் துறைக்கு உத்தரவிட்டது என்று கூறப்படுகிறது.

KfW நிதியுதவியின் கீழ் 1,771 BS6 டீசல் பேருந்துகளை வாங்குவதற்கான மற்றொரு டெண்டர் விடப்பட்டது. இது சாதாரண பேருந்துகள் ஆகும். MTCக்கான 245 பேருந்துகள் உட்பட ஸ்டாண்டர்ட்-ஃப்ளோர் பேருந்துகளின் எண்ணிக்கை இப்போது 1,614 ஆக உள்ளது. மீதமுள்ளவற்றில், TNSTC விழுப்புரத்திற்கு 347 பேருந்துகளும், சேலம் மற்றும் கும்பகோணம் மாநகராட்சிகளுக்கு தலா 303 பேருந்துகளும், TNSTC மதுரை மற்றும் கோவைக்கு முறையே 251 மற்றும் 115 பேருந்துகளும், TNSTC திருநெல்வேலிக்கு 50 பேருந்துகளும் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+