தும்மல் வந்தாலும் என்னை பதவி விலகச் சொன்ன ஸ்டாலின்.. இப்போ ராஜினாமா செய்யாதது ஏன்? எடப்பாடி கேள்வி
சென்னை: தும்மல் வந்தாலும் என்னை பதவி விலகச் சொன்ன ஸ்டாலின், தற்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாதது ஏன் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இன்று தன்னுடைய பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் போதை பொருள்களின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை இவ்வாறு விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 110 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருளும், 874 கிலோ கஞ்சாவும் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இந்த விடியா ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது. அஇஅதிமுக ஆட்சியில் தனக்கு தும்மல் வந்தாலும் நான் பதவி விலக வேண்டும் என்று சொன்ன இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு தார்மீக பொறுப்பேற்று இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்?
போதை பொருள்: அஇஅதிமுக ஆட்சியில் தொடர்ந்து குரல் கொடுத்து, அரசின் கவனத்திற்கு பல்வேறு விஷயங்களைக் கொண்டு வந்த சமூகப் பொறுப்பாளர்கள் பலர், தற்போது திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள இந்த போதைப்பொருள் விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்?
தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு காவல்துறை, கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் விடியா முதல்வரைப் போலன்றி, துரிதமாக நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போதை புழக்கம் அதிகம் இருப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் வெளியிட்ட மற்றொரு பதிவில் கூறியிருப்பதாவது: திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளராக இருந்த ஜாபர்சாதிக் 3ஆண்டுகளாக 3500 கிலோ போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை கடத்தியுள்ளார்.

ஜாபர் சாதிக்: திமுக மற்றும் அதனைச் சார்ந்தோருக்கு ஜாபர் சாதிக் நிதியளித்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்துள்ளன. அந்த போதைப் பணத்தில் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்துள்ளதாக போதை பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனர் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்த நிலையில், தன்னுடைய ஆட்சியில் தன் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கும் போதே, 3 ஆண்டுகளாக போதைப்பொருள் மாபியா நடத்தி வந்த ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு அல்லாமல், அவனுக்கு திமுகவில் கட்சி அங்கீகாரமும் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அவரது சமுகவலைதள பக்கத்தில் பதிவிட்டு பின்பு டெலிட் செய்யப்பட்ட பதிவுகளில் இருந்தே ஜாபர் சாதிக்குடன் நெருக்கம் காட்டியது தெரியவருவதாலும், அதை சார்ந்த செய்திகள் தொடர்ந்து வெளிவருவதாலும், தார்மீக பொறுப்பேற்று இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும்! இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
யார் இந்த ஜாபர்: ஜாபர் சாதிக் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார் என்றும் அவர் அதன் மூலம் சம்பாதித்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை உள்ளிட்டவைகளுக்கு செலவு செய்ததாக போதை பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் தெரிவித்திருந்தார். இதை ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார் என்ற தகவலை உறுதிப்படுத்தும் விதமாக டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியிருந்தார்.
-
அசையாமல் ஆணி அடித்தார் போல நிற்க வைக்கும் 'ஸோம்பி' போதைப்பொருள்! பெங்களூரை தொடர்ந்து பீகாரிலும் ஷாக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications