சட்டசபையை ஆளுநர் புறக்கணிக்கவில்லை! திட்டமிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்! எடப்பாடி பழனிசாமி நறுக்
சென்னை: ஆளுநர் உரை பார்ப்பதற்கு காற்றடித்த பலூன் போல் உள்ளது. ஆனால் அதன் உள்ளே ஒன்றும் இல்லை என தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் ஆளுநர் உரையை புறக்கணிக்கவில்லை, அவர் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்றைய தினம் ஆளுநர் உரையாற்றவிருந்தார். ஆளுநர் ரவி தமிழக சட்டசபைக்குச் சென்றதும் அவரை தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். அவருக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

இதையடுத்து ஆளுநர் உரையாற்றவிருந்த போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்து 3 நிமிடங்களில் அவையை விட்டு வெளியேறிவிட்டார். அதாவது ஆளுநர் உரையை படிக்காமலேயே அவர் வெளியேறினார்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் யார் அந்த சார் என்ற பேட்ஜ்களுடன் அதிமுக எம்எல்ஏக்கள் வந்தனர். அவர்கள் சட்டசபையில் நின்றுக் கொண்டு முழக்கங்களை இட்டனர். இதையடுத்து சபாநாயகர் அவர்களை அமருமாறு சொன்னார்.
ஆனால் அவர்கள் கேட்காததால் அவர்களை அவைக் காவலர்களை வைத்து வெளியேற்ற சொன்னார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியிருப்பதாவது: ஆளுநர் உரை பார்ப்பதற்கு காற்றடித்த பலூன் போல் பெரிதாக உள்ளது.
ஆளுநர் உரையில் ஒன்றும் இல்லை. தமிழக சட்டசபையின் மரபு எப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆளுநர் உரையை புறக்கணிக்கவில்லை! திட்டமிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆளுநர் உரை இல்லாமல் சபாநாயகர் உரையாகவே இருக்கிறது. ஆளுநர் உரையில் திமுக அரசின் சுயவிளம்பரம் மட்டுமே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த அரசு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை. பேசியதையே திரும்ப திரும்ப இந்த அரசு பேசி வருகிறது.
பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் இந்த அரசு இனியும் தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பதாகைகளுடன் சட்டசபைக்கு வந்தோம். யார் அந்த சார், எதற்காக இந்த அரசு பதற்றப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அமைச்சர்கள் மாற்றி மாற்றி அறிக்கை விடுகிறார்களே! யார் அந்த சார்னு கேட்டால் இந்த அரசுக்கு ஏன் கோபம் வருகிறது. மாணவி பலாத்காரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதுதான் இந்த அரசினுடைய கடமையாக இருக்க வேண்டும்.
ஆனால் யாரையோ காப்பாற்றுவதற்கு இந்த அரசு முயற்சி செய்துக் கொண்டிருப்பதுதான் மக்களுடைய சந்தேகம். அதனால்தான் தமிழகம் மட்டுமில்லை, இந்திய அளவில் யார் அந்த சார் என கேட்கும் அளவுக்கு குரல் ஒலிக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியதாக ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால் உண்மையில் அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர்தான் ரிட் மனு தாக்கல் செய்து இந்த வழக்கை கொண்டு செல்கிறார். இதனால்தான் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த வழக்கை அதிமுக தொடர்ந்தது. இந்த அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால் நாங்கள் இதில் தலையிட்டோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications