அசிங்கப்படுத்தி அனுப்பிய எடப்பாடி டீம்.. "அண்ணன்".. திடீரென அன்பாக பேசிய இபிஎஸ்.. விழித்த ஓபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களும் பொதுக்குழு மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுக்குழுவில் கூடி இருந்த எடப்பாடி ஆதரவாளர்கள் மூலம் ஓ பன்னீர்செல்வம் கடுமையாக அவமதிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார்.

Recommended Video

    மேடையிலேயே கடுப்பான EPS | AIADMK பொதுக்குழு கூட்டம் | Oneindia Tamil

    அதிமுக பொதுக்குழு கூட்டம் இப்போது விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தமிழக சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு கட்சியின் பொதுக்குழுவில் ஒட்டுமொத்த தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது, என்றைக்கு ஒற்றைத்தலைமை தீர்மானம் வருகிறதோ அன்றைய பொதுக்குழுவே உண்மையான ஒன்று என்று கே.பி.முனுசாமி மேடையில் அறிவித்தார்.

    என்ன சொன்னார் தமிழ் மகன் உசேன்

    என்ன சொன்னார் தமிழ் மகன் உசேன்

    அதன்பின் இந்த கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தொடர வேண்டிய தீர்மானத்தை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிந்தார் . இதையடுத்து தமிழ் மகன் உசேன் அதிமுகவின் அவை தலைவராக தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில் மேடையில் பேசிய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுக்குழு மீண்டும் கூடும் என அறிவித்தார்.

    என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    அதாவது மீண்டும் பொதுக்குழு கூடும். அப்போது ஒற்றை தலைமை பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் வெளிநடப்பு செய்தார். முன்னதாக பொதுக்குழு கூடிய போது 23 தீர்மானங்களையும் ஓ பன்னீர்செல்வம் அவையில் அறிமுகம் செய்தார். இதையடுத்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அந்த தீர்மானங்களை வழி மொழிந்து பேசினார். அண்ணன் ஓபிஎஸ் முன்மொழிந்த தீர்மானங்களை நான் வழி மொழிகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

    அவமானம்

    அவமானம்

    எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் இன்று மேடையில் ஓபிஎஸ்ஸை அவமதித்தனர். ஓபிஎஸ் வந்ததும் வெளியே போயா.. வெளியே போயா என்று கூறி கோஷம் எழுப்பினார்கள். எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் எல்லோரும் ஓபிஎஸ் முகத்தை பார்த்ததும் வேறு பக்கம் திரும்பிக்கொண்டனர். அவரை மண்டபத்திற்கு வெளியில் இருந்த படியே விமர்சனம் செய்தனர். அதேபோல் ஓபிஎஸ் வெளிநடப்பு செய்த போதும் எடப்பாடி ஆதரவாளர்கள் அவரை பார்த்து கோஷம் எழுப்பினர். வெளியே போயா.. துரோகி.. துரோகி என்று கூறி கோஷம் எழுப்பினர்.

    ஒருங்கிணைப்பாளர்

    ஒருங்கிணைப்பாளர்

    அதோடு வெளியேற சென்ற ஓபிஎஸ் மீது பாட்டில்கள் வீசப்பட்டன. அதோடு அவரின் காரும் பஞ்சர் செய்யப்பட்டது. 3 முறை முதல்வர்.. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மீது வாட்டர் பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் எடப்பாடி மட்டும் எதுவும் கோபமாக பேசாமல் அண்ணன் என்று மரியாதையாக குறிப்பிட்டார். இவர் அண்ணன் என்று சொல்லும் போது ஓபிஎஸ் விழித்தபடியே வேறு பக்கம் பார்த்துக்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+