Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் விலகிக்கிறேன்.. எடப்பாடி போட்ட வழக்கில்.. சட்டென பின்வாங்கிய நீதிபதி.. பரபர ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிரான எடப்பாடி தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த வழக்கில் இருந்தே நீதிபதி விலகி இருக்கிறார்.

எடப்பாடி தாக்கல் செய்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

Edappadi Palanisamy case against Election Commission: Delhi HC judge recused herself from hearing

அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதே நாளில் அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதாவது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிமுக தேர்தல் குழு நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

ஆனால் அதிமுகவின் பொதுக்குழு முடிவை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட எந்த முடிவுகளையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தேர்தல் ஆணையம் இப்போது ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம். தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணைய முடிவுகள் தன்னிச்சையானது. உச்ச நீதிமன்ற முடிவிற்கு எதிராக தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தாலும், அதை எதிர்த்து வழக்கு போடுவது பெரிதாக பலன் அளிக்காது.

இதற்கு முன்பே தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்பட்ட வரலாறுகள் உள்ளன. எனவே பொதுக்குழு வழக்கில் வந்த தீர்ப்பு என்பது எடப்பாடி ஒரு ப்ளஸ் பாயிண்ட். அதாவது, பாருங்க உச்ச நீதிமன்றம் எங்க வாதத்தை ஏற்றுக்கொண்டது.. நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வெற்றிபெறும் தரப்பு தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி கோரிக்கை வைக்க முடியும். ஆனால் தேர்தல் ஆணையம் இதை ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான்.

இதை எதிர்த்தே எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும், பொதுக்குழு முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க கூடாது.. இந்த விவகாரத்தில் விசாரிக்க நினைத்தால் எங்களுக்கு பதில் அளிக்க 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் வழக்கு தொடர்ந்தது ஏன்?.. ஏன் இந்த விவகாரத்தில் இவ்வளவு அவசரம் என நீதிபதி பிரதீபா சிங் கேள்வி எழுப்பினார். அதற்கு கர்நாடக தேர்தலில் போட்டியிட இருப்பதால் விரைந்து முடிவெடுக்கவே டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது. தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணையை ஏப்ரல் 12-க்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நீதிபதி பிரதீபா சிங் விலகி இருக்கிறார். வேறு நீதிபதியின் முன் நாளை இந்த வழக்கை பட்டியலிட டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால் அவரின் இந்த முடிவிற்கான காரணம் தெரியவில்லை.

ஆவணம் என்ன சொல்கிறது? :

Edappadi Palanisamy case against Election Commission: Delhi HC judge recused herself from hearing

இப்போது வரை தேர்தல் ஆணைய ஆவணத்தில் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர். ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகலுடன் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மனு அளித்து உள்ளனர். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்து இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் மனு அளித்து உள்ளனர்.

ஆனால் இதை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி அடிப்படை தொண்டர்கள் மூலமும் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். அப்படி இருக்கும் போது அதை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை எதிர்த்தே எடப்பாடி பழனிச்சாமி வழக்கு போட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+