எல்லாம் செந்தில் பாலாஜிக்காகதான்! எம்.ஆர். விஜயபாஸ்கர் கைதை கண்டித்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கரை ஒரு சிவில் வழக்கில் கைது செய்வதா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசின் பொய் வழக்குகளை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவிடுபொடியாக்குவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பல்வேறு நிலைகளில் கழகத்திற்கு பங்காற்றி வரும் சிறந்த களப்பணியாளர் திரு.
@OfficeOfminMRV
அவர்களை கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன,இந்த கைதிற்கு விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

முன்னாள் விடியா திமுக அமைச்சர், இந்நாள் புழல் சிறைவாசி திரு. செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சிவில் வழக்கு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதீத முறையில் சோதனைகளையும் கைது நடவடிக்கையும் மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.
அரசியல் காழ்ப்புணர்வோடு விடியா திமுக அரசு ஏவும் பொய் வழக்குகள் யாவையும் சகோதரர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டப்பூர்வமாக சந்தித்து வெல்வார்! இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன?: கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலமோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனால் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தன்னுடைய அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் விஜபாஸ்கரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் கரூர் நீதிமன்றத்தில் மீண்டும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கரூர் நீதிமன்றம் கடந்த 2 ஆம் தேதி முதல் உத்தரவை தள்ளி வைத்து இருந்தது. இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர்.
கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள எம் ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் செல்வராஜ், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரகு ஆகியோரது வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 2 மணி நேரத்துக்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் தாளப்பட்டி மணல்மேடு பகுதியில் உள்ல யுவராஜ் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இதில் நிலமோசடி தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா? என தேடினர். இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதேபோல் அவரது சசோகதரர் சேகரின் முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
14 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீஸார் அவரை தேடி வந்த நிலையில் கேரளாவில் தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை இன்று காலை கைது செய்தனர். அவரை கரூர் காந்தி கிராமத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்து வந்தனர். அவரிடம் நில மோசடி குறித்த விசாரணை நடத்தப்படுகிறது.
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications