மரபு பற்றி சபாநாயகர் பேசுறாரு.. ஆனா அவரே சட்டசபை மரபுப்படி நடந்துக்கலையே.. எடப்பாடி காட்டம்!
சென்னை: ஆர்பி உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தராத சபாநாயகர் மரபு பற்றி பேசுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தார் ஆளுநர் ரவி.

தமிழ்நாடு அரசின் உரையை முழுவதுமாக புறக்கணித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரிக்கப்பட்டதாக கூறி அவர் உரையை படிக்காமல் அமர்ந்தார். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் என குறிப்பிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார் ஆளுநர்.
இதையடுத்து ஆளுநர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரையை வாசித்து முடித்த சபாநாயகர் அப்பாவு, "ஆளுநர் உரைக்கு முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டது. ஆளுநரை முறைப்படி அழைத்து வந்தோம். தமிழக அரசின் உரையை வாசிப்பதற்காக இந்த அவைக்கு ஆளுநர் வருகை தந்தார். வந்த இடத்தில் குறைவாக வாசித்தார். அதை குறையாக நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் தேசிய கீதத்தை முதலில் பாடியிருக்க வேண்டும் என்று ஒரு கருத்தை சொன்னார் எல்லோருக்கும் நிறைய கருத்துகள் உண்டு. அவற்றையெல்லாம் பேசுவது மரபல்ல.
இந்த அரசு, முதல்வர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு மாறுபட்ட கருத்துகள், கொள்கை வேறுபாடுகள் இருப்பினும். உயர்ந்த பதவியில் இருக்கும் ஆளுநரை மாண்போடு நடத்துவதுதான் தமிழக அரசின், முதல்வரின் பண்பு. அதில் மாற்றமில்லை. ஆளுநர், அவர் மனதில் இருப்பதை சொன்னார். எங்கள் மனதில் இருப்பது என்னவென்றால், வெள்ளம், புயல் தாக்கியது. ஒரு பைசா கூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிரதமரின் நிதியில் இருந்து ஒரு ரூ.50,000 கோடி வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே என்று நான் கேட்கலாம் என்றார்.
சபாநாயகர் அப்பாவுவின் இந்தப் பேச்சை தொடர்ந்து, சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரையை பதிவேற்றம் செய்யவும், ஆளுநர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்ததது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அதில் பங்கேற்காமல் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் கிளம்பும்போது, "தேசிய கீதம் இனிமேல் தான் பாடுவார்கள்" என்று கூறினார் சபாநாயகர் அப்பாவு. எனினும், ஆளுநர் ரவி நிற்காமல் அவையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இன்று, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் உரையை புறக்கணித்தது என்பது ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும், சபாநாயகருக்கும் இடையே உள்ள பிரச்சனை. அவர்கள் பேசித் தீர்த்துக் கொண்டால் தான் விடிவுகாலம் பிறக்கும். மரபை மாற்றுகிறார்களா, மரபை கடைபிடிக்கிறார்களா என்பது அவர்களை கேட்டால் தான் தெரியும்.
நம் சபாநாயகர் பல மரபுகளை கடைபிடிக்கவில்லை. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை நியமித்தோம். பிரதான எதிர்க்கட்சியின் சட்டமன்ற துணைத் தலைவரான அவருக்கு இருக்கை ஒதுக்கவேண்டியது மரபு. அதைப் பற்றி சபாநாயகர் கேட்கமாட்டேன் என்கிறாரே. பல முறை கோரிக்கைகள் வைத்துவிட்டோம். இனியாவது சபாநாயகர் அப்பாவு மரபைக் கடைபிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற மரபை நிலைநிறுத்த கோரிக்கை வைத்தபோதும், ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணம் சொல்கிறார். இனியும் காரணம் சொல்லமாட்டார் என நினைக்கிறேன். இனியாவது அவற்றை சபாநாயகர் கடைபிடிப்பார் என்று நம்புகிறேன். ஏனென்றால், மரபை கடைபிடிக்க வேண்டும் என அவரே சொல்கிறார்.
சட்டப்பேரவைத் தலைவர் என்பவர் நடுவுநிலைமையோடு செயல்பட வேண்டியவர். சபாநாயகர், அரசியலுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு செயல்படுவதுதான் அனைவரும் எதிர்பார்ப்பது சட்டப்பேரவைத் தலைவரே ஒருதலைப் பட்சமாக செயல்படும்போது அதை என்னவென்று சொல்வது. சட்டப்பேரவைத் தலைவரே ஒருதலைபட்சமாக நடக்கின்றபோது, என்ன செய்வதென்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என விமர்சித்துள்ளார்.
-
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம் -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications