திமுக ஸ்கெட்ச்.. தனியொருவராக போராடும் எடப்பாடி பழனிசாமி.. அதிமுக இப்படியொரு சூழலை சந்தித்ததில்லை!
சென்னை: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அமைச்சர்கள் எல்லோரும் அவரவர் தொகுதிக்குள் முடங்கி கிடக்கும் நிலையில், தனியொருவராக 234 தொகுதிக்கும் சென்று தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நேற்று ஒரே நாளில் 10 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்,
சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்ய முன்பெல்லாம் பெரிய அளவில் நட்சத்திரங்கள் வருவார்கள். நடிகர், நடிகைகள், அதிமுகவின் பல்வேறு தலைவர்கள், கூட்டணி கட்சியின் தலைவர்கள் என பெரிய அளவில் வருவார்கள்.
ஜெயலலிதா என்ற ஒற்றை ஆளுமையால் அதிமுகவின் தேர்தல் களமே மிக உற்சாகமாக இருக்கும். ஆனால் இந்த முறை ஜெயலலிதா இல்லை. பல்வேறு சோதனைகளை கடந்து அதிமுக இபிஎஸ் ஓபிஎஸ் தலைமையில் தேர்லை சந்திக்கிறது.

திமுக ஸ்கெட்ச்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் நிச்சயம் வெல்வார் என்பது பலமான நம்பிக்கை. ஏனெனில் வலுவான வாக்கு வங்கி உள்ளதால் அவர் வெற்றி பெறுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்களைகுறிவைத்து திமுக வலுவான வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால், அவர்களுக்கு தேர்தல் களம் சவாலாக மாறி உள்ளது.

ராமதாஸ் பிரச்சாரம்
இதன் காரணமாக அமைச்ர்கள் பலர் தொகுதிகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். இதனால் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் நட்சத்திர தலைவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தற்போதைய நிலையில் அதிமுகவிற்கு கூட்டணி கட்சிகளில் பாமக தலைவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் சென்னை மற்றும் வடமாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்கள்.

ஓரளவு பிரச்சாரம்
இதேபோல் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் பிரச்சாரம் செய்கிறார். மற்றபடி நடிகை விந்தியா,மனோ பாலா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஓரளவிற்கே பிரச்சாரம் செய்தார். தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யவில்லை. போடியிலேயே முகாமிட்டுள்ளார். பாஜக தலைவர்கள் இதுவரை பிரச்சாரத்திற்கு வரவில்லை. இன்று தான் பிரதமர் மோடி, தாராபுரத்தில் போட்டியிடும் பிரச்சாரம் செய்கிறார். மற்ற தலைவர்கள் இப்போதுவரை பிரச்சாரத்திற்கு வரவில்லை.

தொண்டை வலியுடன் பேசுகிறார்
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனி ஒருவராக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு தொகுதியில் அதிமுக அரசு செய்த நலததிட்ட உதவிகள், சாதனைகளை பட்டியலிட்டு பேசிவருகிறார். இனிஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு தொகுதிக்கு என்னென்னவெல்லாம் செய்வோம் என்பதை அவரே பேசிவருகிறார்.கையில் குறிப்புகளை வைத்துக் கொள்ளாமல் சுற்றி சுற்றிபேசி வரும் அவர், தொண்டை வலியை பொருட்படுத்தாமல் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்.

உற்சாகத்தில் எடப்பாடி
ஒரே நாளில நேற்று சென்னையில் பாஜக வேட்பாளர் குஷ்பு உள்பட 10 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். வெற்றி, தோல்வி என வரும் கருத்துக்கணிப்புளை காதிலேயே வாங்காமல் அவர், கடுமையாக உழைக்கும் பாணியை கண்டு வேட்பாளர்கள் பலர் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். முதலில் கணிப்புகள் அதிமுகவிற்கு சாதகமமாக இல்லை, ஆனால் இப்போது பல தொகுதிகளில் திமுக அதிமுக இடையே கடும் மோதல் இருக்கும் என்று கூறப்படுவதால் உற்சாகமாக உள்ளார் எடப்பாடியார்
-
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications