பொதுச்செயலாளரா? வழக்கு நிலுவையில் இருக்கே! கண்டித்த நீதிமன்றம்! திருத்திய மனுவை தாக்கல் செய்த ஈபிஎஸ்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், எடப்பாடி பழனிசாமி தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது திருத்திய பதில்மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், கடந்த 2022 பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையில்தான் எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றத்தின் கண்டனம் குறித்து விளக்கமளித்திருந்த அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவின் இணைசெயலாளர் இன்பதுரை, “பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அ தி மு க பொதுச்செயலாளர் என்பதை உச்ச நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவை உறுதி செய்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் இந்த வழக்கை தாக்கல் செய்த போது எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தற்போது அவர், அ தி மு க பொதுச்செயலாளராக தொடர்கிறார். எனவே எடப்பாடி பழனிசாமி இப்போது இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வது சரியாக இருக்காது என்பதால்தான் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பும் கேள்வி என்னவென்றால், இந்த வழக்கில் எதிர் மனுதாரர் வரிசையில் எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு இருக்கும்போது பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி பதில் மனு தாக்கல் செய்ய முடியும்? என்பதுதான்.
நாங்கள் அதற்கான விளக்கத்தை எடுத்து சொன்ன போது, அப்படியானால் இந்த வழக்கில் எதிர்மனுதாரர் வரிசையில் இணை ஒருங்கிணைப்பாளர் என இருப்பதை பொதுச்செயலாளர் என மாற்றம் செய்யும்படி திருத்த மனுவை தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார். அதன்படி, உடனடியாக திருத்த மனுவை தாக்கல் செய்ய உள்ளோம்” என்று கூறியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், எடப்பாடி தரப்பில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்று பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications