ஓபிஎஸ் தரப்பே கேட்காத நிவாரணத்தை தனி நீதிபதி வழங்கியுள்ளார்.. எடப்பாடி தரப்பின் டாப் 10 வாதங்கள்
சென்னை: அதிமுக பொதுக் குழு கூட்டம் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் தரப்பினரே கேட்காத ஒரு நிவாரணத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்துள்ளதாக மேல்முறையீட்டு மனுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ்ஸும் பொதுக் குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்துவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவின் மீது கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார். அவர் ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என தீர்ப்பளித்தார். இதன் மூலம் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற அர்த்தமானது.

எடப்பாடி பழனிசாமி தரப்பு
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதன் மீதான இறுதி விசாரணை இன்றைய தினம் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு முன் நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் 9 முக்கிய வாதங்களை முன் வைத்தனர்.

எதிர்க்கட்சி
அவற்றில் 1. ஜூன் 23 முந்தைய நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதியின் தீர்ப்பால் எதிர்க்கட்சியான அதிமுக செயல்படவில்லை. 2. ஓபிஎஸ் என்ற ஒரு தனி நபருக்கு சாதகமாகவே தனி நீதிபதியின் தீர்ப்பு உள்ளதே ஒழிய தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக உள்ளது.

பொதுக் குழுதான் அதிகாரம் படைத்த அமைப்பு
3. கட்சியில் பொதுக் குழுதான் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாகும். 4. அனைத்து முக்கிய முடிவுகளையும் பொதுக் குழுவே எடுக்கும். அந்த பொதுக் குழுதான் ஒற்றைத் தலைமை கோரியது. இதற்கு முன்னோட்டமாகத்தான் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தொண்டர்களின் குரல்
5. ஒன்றரை கோடி தொண்டர்களின் குரலே பொதுக் குழு கூட்டமாகும். 6. ஓபிஎஸ் தரப்பு கேட்காத ஒரு நிவாரணத்தை ஓபிஎஸ் தரப்பிற்கு தனி நீதிபதி கொடுத்திருக்கிறார்கள். 7. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அப்பால் யூகங்களின் அடிப்படையில தனி நீதிபதியின் உத்தரவு இருக்கிறது. 8. அதிகாரம் பெற்றவர்கள்தான் பொதுக் குழுவை கூட்ட முடியும். அதன் அடிப்படையில்தான் ஜூன் 23, ஜூலை 11 ஆகிய தேதிகளில் கூட்டப்பட்டது.

முக்கிய வாதங்கள்
9. அதிகாரம் பெற்றவர் பொதுக் குழுவை கூட்டவில்லை என்ற தனிநீதிபதியின் தீர்ப்பு தவறானது. 10. கட்சி விவகாரங்களை பொருத்தவரை பொதுக் குழுவின் முடிவுதான் இறுதியானது. இதை ஏற்பவர்கள்தான் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தொடர முடியும் என இந்த 10 முக்கிய வாதங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முன் வைத்துள்ளனர்.

இபிஎஸ் தரப்பின் சூப்பர் பாயிண்ட்
இதில் முக்கியமானதாக ஓபிஎஸ் தரப்பே எதிர்பார்க்காத நிவாரணத்தை தனி நீதிபதி கொடுத்துள்ளார் என்பதுதான். அதாவது ஓபிஎஸ் தரப்பு மனுவில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்பதுதான். எனவே நீதிமன்றத்தின் தீர்ப்பும்- செல்லும், செல்லாது என்ற ரீதியில்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஓபிஎஸ் தரப்பு கேட்காத நிவாரணமான ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளதைதான் இபிஎஸ் தரப்பு முன் வைத்துள்ளது.
-
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி!












Click it and Unblock the Notifications