"ஷார்ப் எடப்பாடியார்".. டக் டக்னு முடிவு.. ஒரே நாளில் டபுள் அறிவிப்பு.. எதிர்க்கட்சிகள் கப்சிப்!
ஒரே நாளில் டபுள் அறிவிப்பு தந்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: "ஷார்ப் முதல்வர்" என்ற பெயரை எடுத்து வருகிறார் எடப்பாடியார்.. இதற்கு காரணம் இன்று ஒரே நாளில் 2 அறிவிப்புகளை வெளியிட்டதுதான்.. பஸ், ரயில் ரெண்டுமே ஓட போகுதாம்.. இதனால் மக்களின் ஏகோபித்த வரவேற்பை எடப்பாடி பெற்றுள்ளதுடன், திமுகவுக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளார்.
கடந்த 4 நாட்களாகவே தமிழக மக்கள் மண்டையை உடைத்து கொண்டு இருந்தனர்.. "இ பாஸ் ரத்து ஆகிவிட்டதாம், பஸ் ஓடுமாம்.. ஆனால், மாவட்டம் விட்டு மாவட்டம் போக கூடாதாம்.. இது எப்படி சாத்தியம்" என்று குழம்பி போய் கேள்விகளை எழுப்பி வந்தனர்.
தற்போது, ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல பஸ்கள், ரயில்கள் விட அனுமதி அளித்துள்ளார் எடப்பாடியார்... ஏற்கனவே பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும் தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பு ஏக குஷியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
ரஜினிக்கு வெயிட் பண்ணும் நேரத்தில் கமல் போட்ட சூப்பர் பிளான்! பிக் பாஸ் 4 க்கு பிறகு ஆரம்பம்?

எடப்பாடியார்
தேர்தல் வரும் சமயத்தில், எடப்பாடியாரின் ஒவ்வொரு நகர்வும் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. ஒருகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் விமர்சனத்துக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்று சொன்னவர், இன்று ஒவ்வொரு விமர்சனத்தையும் கருத்தில் கொண்டு, அதை செயல்படுத்தியும் வருகிறார்.

முக ஸ்டாலின்
இன்னும் ஓபனாக சொல்ல போனால், ஸ்டாலினை மேற்கொண்டு எதுவும் விமர்சிக்க கூட விடுவதில்லை.. அப்படியே விமர்சித்தாலும், அதை நீட்டிக்க விடுவதில்லை.. உடனடியாக அதிகாரிகளுடன், துறை வாரியான பேச்சுவார்த்தை நடத்தி அந்த விமர்சனத்தை தகர்க்க முனைகிறார்.. அப்படிப்பட்ட அதிரடிகளைதான் தமிழகம் சில தினங்களாகவே கண்கூடாக பார்த்து வருகிறது.

சுனில் வியூகங்கள்?
ஒருவேளை, இந்த அதிரடிகள் எல்லாம் பின்னணியில் உள்ள சுனிலின் வியூகங்களாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. அதேசமயம், திமுகவுக்கு நிறைய வேலைகள் வந்துள்ளது.. நிறைய பொறுப்புகள் கூடியுள்ளது.. எந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் முன்பு வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் வலுவாக இருந்தால் மட்டுமே அது உற்று நோக்கப்படும்.. ஆளும் தரப்பு மீது தகுந்த ஆதாரத்துடன் புகார்களை கொண்டு சென்றால் மட்டுமே அதன் உண்மைதன்மை பரிசீலிக்கப்படும்.

சாதனைகள்
பொதுவாக, எதிர்க்கட்சியானது, ஆளும்தரப்பு மீது குற்றச்சாட்டுகளை சொல்லிதான் ஓட்டு கேட்கும், பிரச்சாரம் செய்யும்.. மற்றொரு பக்கம், தன் கட்சி செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கும்.. அந்த வகையில், திமுக, இனி எடப்பாடி அரசு மீது என்னென்ன புகார்களை சொல்லி ஓட்டு கேட்க போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புதான்.. அதுமட்டுமல்ல, இது இரண்டிற்கும் தன்னை திமுக தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்பதைதான் எடப்பாடியாரின் இன்றைய 2 அறிவிப்புகளும் புலப்படுத்தி உள்ளன!
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications