இத கவனிச்சீங்களா? பொதுக்குழுவில் ஓபிஎஸ்சின் “அந்த” பலத்தையே அசைத்த எடப்பாடி - பக்கா பளான்
சென்னை: இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு இருக்கும் அவரது சொந்த சமுதாய ஆதரவையும் அசைத்துப் பார்க்கும் வகையில், அவர் சார்ந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களையே மேடையில் முன்னிலைபடுத்தி இருக்கிறார்.
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.
கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

ஓபிஎஸ் நகர்வு
இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

சமூக அரசியல்
முன்னதாக ஒற்றைத் தலைமை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு கிளப்பியதிலிருந்தே, தென் மாவட்டம் மற்றும் சமூக ரீதியான ஆதரவை திரட்டத் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கு மாவட்டங்களிலும் அவரது சமூகத்திலும் இருக்கும் செல்வாக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இருப்பதை காட்ட அவரது ஆதரவாளர்களும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினர்.

எடப்பாடிக்கு அதிகரித்த ஆதரவு
ஆனாலும், தென் மாவட்டங்களை சேர்ந்த ஓ.பி.எஸின் சொந்த சமுதாயத்தை சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பலரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே சென்றுகொண்டிருந்தது. அண்மையில்கூட ஓபிஎஸின் சொந்த மாவட்டமான தேனி அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஓபிஎஸின் போடி தொகுதி அதிமுக நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

எடப்பாடியின் மாஸ்டர் ப்ளான்
இந்த நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் சமுதாய ஆதரவும் தன் வசமே இருப்பதை காட்டவும், முழு ஆதரவையும் ஈர்க்கவும் எடப்பாடி தரப்பு முயன்றதை இன்று பார்க்க முடிந்தது. அதன் அடிப்படையில் தென் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மாவட்ட தலைவர்களுக்கு முன்னுரிமை
இதேபோல், பொதுக்குழுவின் 16 தீர்மானங்களில் 8 தீர்மானங்களை வாசித்து ஒப்புதல் பெற்றவர் தென் மாவட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். மீதமுள்ள 8 தீர்மானங்களை வாசித்தவர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். தீர்மானங்களை முன்மொழிந்தவர் நத்தம் விஸ்வநாதன். கட்சி வரவு செலவு கணக்கை வாசித்து ஒப்புதல் பெற்றவர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே தென் மாவட்டங்களையோ அல்லது ஓபிஎஸ் சமுதாயத்தையோ சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications