எது சூர்யாவா? அண்ணாமலை அசந்த நேரத்தில் முக்கிய தலையை தட்டித் தூக்கிய எடப்பாடி! பாஜகவுக்கு ஷாக்!
சென்னை: திருச்சி சூர்யா அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் பரவிய நிலையில், அவருக்கு மீண்டும் பொறுப்பு கொடுத்து தக்கவைத்துக் கொண்டார் அண்ணாமலை. அதேசமயம், தமிழக பாஜக ஒபிசி அணியின் செயலாளர் தங்கராஜை தட்டித் தூக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். தமிழக பாஜகவில் மாநில ஓபிசி அணி தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் பாஜக சிறுபான்மையினர் அணியில் பதவி வழங்குவதில் டெய்சி சரணுக்கும், சூர்யா சிவாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் டெய்சி சரணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருச்சி சூர்யா ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். அது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. பின்னர் திருச்சி சிவாவும், டெய்சி சரணும் சமரசம் ஆனார்கள். அதேசமயம், திருச்சி சூர்யா இப்படி பேசியதால் 6 மாதங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டார். இதனையடுத்து கட்சியில் இருந்து தான் விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்தார். இதனையடுத்து எந்த கட்சியிலும் சேராமல் இருந்து வந்த சூர்யா சிவா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாமலை பற்றியும் அதிருப்தியோடு ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு தகவல் பரவியது. திருச்சி சூர்யா, அதிமுகவில் இணைய உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அப்பாயின்மெண்ட் வாங்கிவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. திருச்சி சூர்யாவை வைத்து பாஜகவையும், திமுகவையும் அட்டாக் செய்யலாம் எனத் திட்டமிட்டு, அவரை அதிமுகவில் சேர்ப்பதாக கூறப்பட்டது.
உடனே உஷாரான அண்ணாமலை, திருச்சி சூர்யாவை மீண்டும் கட்சியில் சேர்த்து அவர் வகித்து வந்த பதவியிலேயே மீண்டும் தொடரலாம் என அறிவித்தார். திருச்சி சூர்யாவும், அண்ணாமலையை முதல்வர் ஆக்காமால் ஓயமாட்டேன் எனச் சூளுரைத்து, மகிழ்ச்சியாக பாஜகவில் தொடர ரெடியாகிவிட்டார். அதிமுக போட்ட ஸ்கெட்ச் புஸ்வானமாகிவிட்டதே என பாஜகவினர் பேசி வந்தனர்.
ஆனால், இந்த நேரத்தில் பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு காரியத்தைச் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. திருச்சி சூர்யா மீண்டும் பாஜகவில் இணைந்த நிலையில், மற்றொரு பாஜக முக்கிய பிரமுகரை எடப்பாடி பழனிசாமி சைலண்டாக அதிமுகவுக்கு இழுத்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தமிழக பாஜக ஓபிசி அணியின் மாநிலச் செயலாளராக இருந்த தங்கராஜ் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். திமுகவின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினரான தங்கராஜ், கோட்டைமேட்டுப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து ஓபிசி அணி மாநில செயலாளராக இருந்து வந்த நிலையில், அவர் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.
இந்த விஷயம் தமிழக பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் இருந்து வெளியேறும் முக்கிய நிர்வாகிகளை அதிமுக தலைமை அரவணைத்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதே, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட ஏராளமானோரை கட்சியில் சேர்த்தார் எடப்பாடி. இப்போது கூட்டணி முறிந்துள்ள நிலையில் பாஜகவின் பல முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications