தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. எடப்பாடி திடீர் மயக்கம்.. முகத்தில் தண்ணீர் தெளித்த நிர்வாகிகள்
சென்னை: சென்னையில் திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.
Recommended Video
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் கடந்த 3 தினங்களாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் இல்லாத ஆர்ப்பாட்டம் முதல்முறையாக நடைபெற்றது.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலகம்
சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக அரசை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் கொரோனாவால் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

கொடுங்கோல்
இந்த கொடுங்கோல் ஆட்சியினரிடம் இன்று மக்களை காப்பாற்றும் விதமாக அதிமுக சார்பில் இன்று சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை உயர்த்துவோம் என தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிடாதது ஏன்?

தேர்தல் அறிக்கை
ஒரு வேளை அப்படி குறிப்பிட்டிருந்தால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும். தேர்தல் அறிக்கையில் சொல்லாமல் இப்போது செய்திருப்பதுதான் திராவிட மாடல். காற்றுக்கு எப்படி தடை போட முடியாதோ , அது போல் அதிமுகவின் வளர்ச்சிக்கும் தடை போட முடியாது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம்
சுமார் ஒரு மணி நேரமாக அவர் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் தனது பேச்சை முடித்த போது எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனே கீழே அமர முற்பட்டார். இதையடுத்து உடனிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் தெளித்து அவரை மேடையில் அமர வைத்தனர். அவருக்கு பதாகைகளை வைத்து விசிறி விட்டனர்.

மயக்கம்
வெயிலால் இந்த மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இவருக்கு முன்னர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும், முன்னாள் எம்பி விஜயகுமாருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் சீனிவாசன் மேடைக்கு பின்னர் அமர வைக்கப்பட்டார். ஆர்ப்பாட்டம் முடிந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நேராக வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் தற்போது நலமாக இருக்கிறார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications