பெரிய விலை கொடுக்க போறீங்க.. ஒரு சீட்டு கூட கிடைக்காது.. எடப்பாடிக்கு போன வார்னிங்.. மொத்தமா ஓவரா?
சென்னை: தேர்தல் மட்டும்தான் இப்போது எடப்பாடி பழனிசாமி குரு பூஜைக்கு செல்ல காரணம். ஆனால் இதை எல்லாம் முக்குலத்தோர் நம்ப மாட்டார்கள். அவர்கள் இதை எல்லாம் நம்பி வாக்கு அளிக்க மாட்டார்கள். அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தேவர் குரு பூஜைக்கு நேற்று சென்றார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடந்தது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் அங்கே சென்றார். இங்கே எடப்பாடி மரியாதை செலுத்தும் போதே.. அவருக்கு எதிராக கடுமையான கோஷம் எழுப்பப்பட்டது. எடப்பாடி ஒழிக.. இபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது .

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தேர்தல் மட்டும்தான் இப்போது எடப்பாடி பழனிசாமி குரு பூஜைக்கு செல்ல காரணம். ஆனால் இதை எல்லாம் முக்குலத்தோர் நம்ப மாட்டார்கள். அவர்கள் இதை எல்லாம் நம்பி வாக்கு அளிக்க மாட்டார்கள். அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். இதை எல்லாம் நம்பி வாக்கு கொடுக்க மாட்டோம். அவர் நம் முதுகில் குத்திவிட்டார் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் எடப்பாடிக்கு இதனால் எல்லாம் வாக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அங்கே அவருக்கு ஒரு சீட் கூட கிடைக்காது.
நேற்று பெரிய பிரச்சனை நடந்திருக்கும். குருபூஜையில் எடப்பாடியால் மோதல் வந்திருக்கும். ஆனால் தேவரை பார்க்க வந்துள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது யாரும் தாக்கவில்லை. மரியாதைக்காக எடப்பாடியை விட்டு வைத்தனர். அவர் 2-3 வருடம் உழைக்க வேண்டும். அப்போதுதான் முக்குலத்தோர் நம்பிக்கையை பெறுவார். அதிமுக மீண்டும் சேர வேண்டும், தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை இணைக்க வேண்டும். அப்போதுதான் சமாதானம் செய்ய முடியும்.

பிரச்சனை மேல் பிரச்சனை: ஆனால் அதை பற்றி எல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசுவது இல்லை. அவரின் நடவடிக்கைக்கு சரியான விலை கொடுக்க போகிறார். அவரின் செயலுக்கு கண்டிப்பாக சிக்கல் வரும். அவர் முக்குலத்தோரை காயப்படுத்திவிட்டார். அதற்கு பதில் தர வேண்டும். இல்லையென்றால் 2024ல் அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும். இதே போக்கை அவர் கடைபிடித்தால் முக்குலத்தோர் அவருக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள். அவரை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
எடப்பாடிக்கு வெற்றிவாய்ப்பு இல்லாமல் போகும் என்பதை உறுதியாக சொல்லலாம். அவரை முடக்கி போடும் வாய்ப்புகள் உள்ளன. எடப்பாடி முக்குலத்தோரை பழிவாங்கிவிட்டார். சசிகலா யாரு என்று கேட்டவர் எடப்பாடி. அவரை எப்படி முக்குலத்தோர் மன்னிப்பார்கள். சொல்லுங்கள். அவரை பழிவாங்கியதை விடுங்கள்.. ஓ பன்னீர்செல்வத்தை பழிவாங்கி உள்ளார். டிடிவி தினகரனை பழிவாங்கி உள்ளார். முக்குலத்தோரை மொத்தமாக அவர் பழிவாங்கி உள்ளார். அவரை எப்படி முக்குலத்தோர் பிரிவினர் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்.
இது போக முக்குலத்தோர் இடஒதுக்கீட்டீல் பிரச்சனை செய்துள்ளீர்கள். அவர் மனசாட்சி உறுத்த வேண்டும். அந்த மக்களுக்கு அவர் துரோகம் செய்துள்ளார். அந்த துரோகத்தை செய்துவிட்டு அவர் எப்படி குருபூஜைக்கு செல்ல முடியும். அவர் இப்போது இரட்டை வேடம் போட்டால் அதனால் பலன் இல்லை. முக்குலத்தோர் எமோஷனலான மக்கள். அவர்கள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். அவருடன் இருக்கும் ஆட்களுக்கும் கூட இது தெரியும். எடப்பாடி பழனிசாமி இதை உணர வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications