சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூ பாதையா..? சிங்கப்பாதையா..? எடப்பாடி முன் இருக்கும் இரண்டே இரண்டு வாய்ப்புகள் - விரைவில் டாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பாதகமாக பார்க்கப்படும் நிலையில் அவர் மீண்டும் கட்சியை கைப்பற்ற 2 வழிகள் உள்ளன.

Recommended Video

    ADMK Crisis | ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவிதான் உயர்ந்தது - OPS தரப்பு வழக்கறிஞர்கள்

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் தடைகள், வழக்குகள், போராட்டங்களை கடந்து கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடியது. அதில் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பாத்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

     மாயத்தேவருக்கு மரியாதை! கிளம்பிய சசிகலா.. பயணத்தில் பன்னீர்செல்வம்! 'அவர்’ வருவாரா என எதிர்பார்ப்பு! மாயத்தேவருக்கு மரியாதை! கிளம்பிய சசிகலா.. பயணத்தில் பன்னீர்செல்வம்! 'அவர்’ வருவாரா என எதிர்பார்ப்பு!

    அடுத்தடுத்த உத்தரவுகள்

    அடுத்தடுத்த உத்தரவுகள்

    அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலரையும் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஓ.பன்னீர்செல்வமும் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

    ஓபிஎஸ் வழக்கு

    ஓபிஎஸ் வழக்கு

    இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    ஐகோர்ட் உத்தரவு

    ஐகோர்ட் உத்தரவு

    இந்த நிலையில் இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை வெளியிட்டார். அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், ஜூலை 23க்கும் முன் கட்சியில் இருந்த நிலையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

    மீண்டும் பழைய நிலை

    மீண்டும் பழைய நிலை

    சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவின் காலமாக 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போயுள்ளது. எனவே இனி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை. அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லாது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இரண்டே வழி

    இரண்டே வழி

    இனி அதிமுகவில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட இரண்டே வழிகள்தான் உள்ளன. கட்சி விதிப்படி அவைத் தலைவரால் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க முடியாது என்பதால், ஓ.பன்னீர்செல்வத்தின் அறிவுறுத்தலை ஏற்று பொதுக்குழுவை கூட்டி தனது செல்வாக்கை பயன்படுத்தலாம். இதனை ஓ.பன்னீர்செல்வம் பெரும்பாலும் சம்மதிக்க வாய்ப்பில்லை. அல்லது உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்து ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு முடிவுகளை செல்லுபடியாக்க முயற்சிக்கலாம்.

    English summary
    Edappadi Palanisamy have two chances to capture ADMK for OPS team: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பாதகமாக பார்க்கப்படும் நிலையில் அவர் மீண்டும் கட்சியை கைப்பற்ற 2 வழிகள் உள்ளன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X