Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலறிய அதிமுக.. எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னில் "கால்" வைத்ததுமே..எல்லாமே போச்சு.. ஸ்டாலின் ஸ்கெட்ச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. இது முக்குலத்தோரின் மனதை குளிர்விக்குமா? தென்மண்டல வாக்குகளை எடப்பாடிக்கு முழுமையாக பெற்றுத்தருமா?

கடந்த முறை, ஒட்டுமொத்த தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பில், எடப்பாடி பழனிசாமி இருந்தபோதே, சாதிய ரீதியான கட்சி என்ற "அடையாளத்தை" அதிமுக பெற்றுள்ளதாக சலசலக்கப்பட்டது. அதற்கேற்றபடி, ஓபிஎஸ் ஒரு பக்கம், எடப்பாடி மறுபக்கம் என தெற்கு + கொங்கு என கடந்த ஆட்சி காலத்தில் அரசியல் செய்து வந்ததை மறுக்க முடியாது.

Edappadi Palanisamy in Pasumpon Devar Jayanthi and Will AIADMK win the votes of DMK, AMMK

முக்குலத்தோர் வாக்குகள்: எனினும், அதிமுகவில் அளவுக்கு அதிகமாகவே கொங்கு புள்ளிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதை, தென்மண்டல மக்கள் கவனிக்காமல் இல்லை..

அந்த நேரத்தில்தான், அதாவது 2022-ம்ஆண்டில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.. சசிகலா உட்பட ஓபிஎஸ் டீம் ஆதரவாளர்கள் அத்தனை பேரும் பசும்பொன்னுக்கு நேரடியாக சென்று தேவர் சிலைக்கு மாலை போட்டனர்.. ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி, பசும்பொன்னுக்கு போகாமல் எடப்பாடி பழனிசாமி தவிர்த்துவிட்டதையும், தென்மண்டல மக்கள் கவனிக்காமல் இல்லை.

மாயத்தேவர்: எல்லாவற்றிற்கும் மேலாக, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதையும், தென்மண்டல மக்கள் கவனிக்காமல் இல்லை.. இதைத்தொடர்ந்து மூத்த தலைவர் மாயத்தேவருக்கு, அஞ்சலி செலுத்தவும் எடப்பாடி பழனிசாமி செல்லாமல் நழுவிக்கொண்டதையும், தென்மண்டல மக்கள் கவனிக்காமல் இல்லை.

இவ்வளவும் சேர்ந்து எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்திகள் பெருகிக் கொண்டே வந்ததையும், இந்த அதிருப்திகளை, தங்களுக்கு சாதகமாக ஓபிஎஸ், தினகரன் டீம் அறுவடை செய்ய முற்பட்டதையும் நம்மால் மறுக்க முடியாது.

இதோ இப்போதும், தேவர் ஜெயந்திக்கு எடப்பாடி பழனிசாமியும் சென்றுள்ளார்.. எடப்பாடியின் வருகைக்காக, ஆர்பி உதயகுமார், எத்தனையோ ஏற்பாடுகளை இழுத்துப்போட்டுக் கொண்டு செய்திருந்தாலும், எடப்பாடி பழனிசாமி பசும்பொன் வருவதற்கு, முக்குலத்தோர் சமுதாய அமைப்புகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது, மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

கோபக்கனல்: எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களும் சேதப்படுத்தப்பட்டன. எடப்பாடியை, பவுன்சர்களுடன் பசும்பொன் அழைத்து செல்லும் நிலைமைதான் ஏற்பட்டுள்ளதே தவிர, அச்சமூக மக்களின் கோபமும், வருத்தமும், அதிருப்தியும் இன்னும் நீங்கவில்லை என்றே தெரிகிறது.

தீட்டு கழிச்சு விடுங்க: ''எடப்பாடி முகத்தை ஏறெடுத்தும் பார்க்காம திரும்பிபடுத்துக் கொள்ளும் தேவரய்யா ஆன்மா.. அப்புறம் அந்த ஆளு வந்து போனதும், டெட்டாயில், பினாயில், லைசால், ஹார்பிக், பிளீச்சிங் பவுடர் எல்லாத்தையும் சேர்த்து கலக்கி அந்த தெய்வீகத் திருவிடத்தை கழுவி விட்டு தீட்டுக் கழிச்சு புனிதப்படுத்துங்க" என்று மூத்த தலைவர் மருது அழகுராஜின் விமர்சனத்தையும் புறம்தள்ளி, இன்று பசும்பொன்னாருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்த 2 வருட காலத்தில், சட்டமன்றம் உட்பட அனைத்து விஷயங்களிலும் தனக்கு அடுத்தபடியான இடத்தை ஆர்பி உதயகுமாருக்கு ஒதுக்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

ஆர்பி உதயகுமார் மட்டுமல்லாமல், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா போன்றோருக்கு, கட்சியில் எவ்வளவுதான் முக்கியத்துவம் தந்தாலும்கூட, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், முனுசாமி போன்றோரை, கட்சியில் எவ்வளவுதான் முன்னிலைப்படுத்தினாலும்கூட, மாஜி அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ்.மணியன் போன்றோரை எவ்வளவுதான் தாங்கி பிடித்தாலும்கூட, முக்குலத்து வாக்குகளை, அவ்வளவு சுலபத்தில் எடப்பாடியால் பெற முடியாது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

முக்குலத்தோர் வாக்குகள்: தலைவர்களுக்கு செலுத்தும், வழக்கமான மரியாதையாகத்தான், இன்றைய தின பசும்பொன் நிகழ்வு பார்க்கப்படுமே தவிர, சிலைக்கு மாலை அணிவித்துவிடுவதால் மட்டுமே, வாக்குகள் கிடைத்துவிடாது என்கிறார்கள். வேண்டுமானால், முக்குலத்தோர் மக்களின் கனன்று கொண்டிருக்கும், கோபக்கனலை ஓரளவுக்கு, எடப்பாடியின் பசும்பொன் நிகழ்வு தணிக்குமே தவிர, யாரையும் குளிரவைத்து விடாது என்கிறார்கள்.

மதுரையை மாநாட்டை நடத்தியதுபோலவே, கூடுதல் முக்கியத்துவத்தை இனிமேலும், தென்மண்டலத்துக்கு எடப்பாடி பழனிசாமி தர வேண்டியிருக்கும்.. இதுபோக, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, சிவகாசி போன்ற தொகுதிகளிலும், கூடுதல் கவனங்களை இனிவரும் நாட்களில் செலுத்தி, அந்த தொகுதி பிரமுகர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளையும் தேர்தலில் வழங்கினால் மட்டுமே, முக்குலத்தோர் வாக்குகளை ஓரளவு அள்ள முடியும் என்றும் சொல்கிறார்கள்..

4 லட்சம் வாக்குகள்: அதுமட்டுமல்ல, இந்த தொகுதிகளில் திமுகவும் வலுவாக உள்ளதை மறுக்க முடியாது. எடப்பாடி மீதுள்ள முக்குலத்தோருக்கு அதிருப்திகளை உணர்ந்துதான், இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலினும் பசும்பொன்னுக்கு சென்றுள்ளதை நாம் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.

இதுபோக, தினகரனிடம் 4 லட்சம் வாக்குகளையும் வென்றாக வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு உள்ளது.. கடந்த முறை ஓபிஎஸ்ஸுடன் இணைந்தே, இப்படியொரு வாக்கு சதவீதத்தை எடப்பாடியால் பெற முடியாதபோது, இந்த முறை, ஓபிஎஸ்ஸூம் துணைக்கு இல்லை என்பதால், கூடுதல் சிக்கல் எடப்பாடிக்கு உள்ளது. அதுமட்டுமல்ல, கடந்த முறை தினகரன் பெற்ற வாக்குகள், சொந்த சமூக வாக்குளையும் தாண்டி, திமுகவுக்கு எதிரான வாக்குகளையும் அறுவடை செய்திருந்தார்.

டிடிவி தினகரன்: தினகரன் மட்டும் கடந்த முறை கூட்டணியில் இடம்பெற்றிருந்தால், அதிமுகவின் வெற்றிமுகம் அரசியல் களத்தில் பதிந்திருக்கும்.. அந்தவகையில் இம்முறையும், தினகரனை சமாளித்து, திமுகவையும் வென்றாக வேண்டிய நெருக்கடி எடப்பாடிக்கு பெருகி உள்ளது.

ஆக, திமுக ஒருபக்கம், ஓபிஎஸ், தினகரன், சசிகலா மறுபக்கம் என இரு ஜாம்பவான்களுக்கு நடுவில், எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

பெருத்த நம்பிக்கை: கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் மாநாட்டை நடத்தியபோது, கோரிப்பாளையத்திலேயே இருக்கும், தேவர் சிலைக்கு, எடப்பாடி பழனிசாமி ஏன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவில்லை? என்ற கேள்விக்கு, பதில் வராமல் இருப்பதையும் இன்றுவரை நினைவூட்டுகிறார்கள் அச்சமூக மக்கள்.

அதற்கேற்றபடி, பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கார் அபிராமத்தில் மறிக்கப்பட்டுள்ளது.. அவரின் கார் மீது கற்களும் வீசியதாக செய்திகள் வெளியாகி வருன்றன. இவைகளை எல்லாம், திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கான அரசியலாக மாற்றக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம், "விருப்பப்பட்டவர்கள் பசும்பொன் வருவதில் எந்த தவறும் இல்லை" என்ற சசிகலா பேசியிருப்பது மட்டுமே, தற்சமயம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துவரும் ஒரே ஆதரவாக கருதப்படும் நிலையில், பெருத்த நம்பிக்கையுடன் பசும்பொன்னில் கால் வைத்துள்ளார்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+