மொத்தமா இறங்குங்க.. போதைப் பொருட்களை அறவே ஒழிக்கும் வரை விடக்கூடாது.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
சென்னை: போலீசாரும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் களமிறங்கி, தமிழகத்தில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப் பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மதுரை, சென்னையில் இன்று ஒரே நாளில் ரூ.180 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சிலமன் பிரகாஷ் என்பவரிடம் இருந்து 30 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மதுரை ரயில் நிலையத்தில் அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.90 கோடி எனக் கூறப்படுகிறது.

அதோடு சென்னையில், அவரது வீடு உள்ள பகுதியில் சோதனை நடத்தியதில் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் சிக்கியது. அதன் மதிப்பும் ரூ.90 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இப்படி இன்று ஒரே நாளில் ரூ.180 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் ஈரானில் இருந்து குஜராத்துக்கு போதைப் பொருள் கடத்தி வந்த கும்பல் ஒன்று பிடிபட்டது. அப்போது தமிழகத்தை சேர்ந்த 3 பேர் சிக்கினர். அவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், தமிழகத்தில் போதைப்பொருள் அதிகளவில் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி X சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் இரு இடங்களில் நேற்று ஒரே நாளில் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாலை சென்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல கோடிகள் மதிப்புமிக்க போதை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது பெருத்த அதிர்ச்சியை அளிக்கிறது.
ரயில் குப்பைகள் முதல் கார்ப்பரேஷன் குப்பைகள் வரை எங்கு காணினும் போதைப்பொருட்களே நீக்கமற நிறைந்துள்ளன. நாம் வாழ்வது தமிழகமா அல்லது போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழித்தெழுந்து, தொடர் நடவடிக்கைகள் எடுத்து போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.
இனி தமிழகத்தில் போதை பொருள் அறவே ஒழிக்கும் வரை நாங்கள் விடுவதாக இல்லை. காவல் துறையும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் களமிறங்கி, மாவட்டந்தோறும் சோதனைகள் நடத்தி, தமிழகத்தில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப் பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
இந்த போதைப் பொருட்களை புழக்குவோர் யாராக இருப்பினும், எவ்வித பாகுபாடும் இன்றி கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தமிழகத்தை போதைப் பொருள் அறவும் அற்ற மாநிலமாக மாற்ற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. மதுரையில் பலகோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தோமெட்டபைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இன்னும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கஞ்சா, கொக்கைன், ஹெராயின் என வளர்ந்து இன்றைக்கு மெத் வரை நீளும் அனைத்து போதைப் பொருட்களும் சர்வ சாதாரணமாகப் புழங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை இந்த விடியா திமுக அரசு மாற்றியிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உரியது.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே சவக்குழியில் தள்ளும் இந்த போதைப் பொருள் புழக்கத்தை தடுக்காமல், போதை மாபியா தலைவனுக்கு முதல் குடும்பத்துடன் நெருக்கமும் அரசியல் பதவி பின்புலமும் அளித்து ஊக்குவித்த விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு என்னுடைய கடும் கண்டனம்" எனத் தெரிவித்திருந்தார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications