விஜயகாந்தை வைத்து ஜெயலலிதா ஆடிய அதே கேம்.. விஜய்யை வைத்து.. எடப்பாடி ஆடும் ஸ்மார்ட் ஆட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக - அதிமுக இரண்டும் கூட்டணி வைத்து தேர்தலில் திமுகவை வீழ்த்திய அரசியல் வரலாறு தமிழ்நாட்டில் மறக்க முடியாதது. அதேபோன்ற வரலாற்றை மீண்டும் விஜய்யை வைத்து செய்யலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்றே தோன்றுகிறது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 40+ இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விஜய்யிடம் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யுடன் அதிமுக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

TVK Vijay

கடந்த 48 மணி நேரமாக அதிமுக டாப் தலைகள் சிலர் விஜய்யுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜய்யுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

எடப்பாடி நம்பிக்கை

அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பிக் பிளான்

இப்படிப்பட்ட நிலையில்தான் தேமுதிக - அதிமுக இரண்டும் கூட்டணி வைத்து தேர்தலில் திமுகவை வீழ்த்திய அரசியல் வரலாறு தமிழ்நாட்டில் மறக்க முடியாதது. அதேபோன்ற வரலாற்றை மீண்டும் விஜய்யை வைத்து செய்யலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்றே தோன்றுகிறது. அதவாது விஜயகாந்த் உதவியுடன் 2011 தேர்தலில் ஜெயலலிதா வென்றார். பின்னர் அதே விஜயகாந்த் கட்சி எம்எல்ஏக்களை உடைக்கும் அரசியலையும் ஜெயலலிதா செய்திருந்தார்.

2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு 10.5 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து, 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் வெற்றி வாகை சூடியது.

இத்தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்ற விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து பெரும் தோல்வியை சந்தித்தது.

எனினும், அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கும், எதிர்க்கட்சியான தேமுதிகவுக்கும் இடையிலான கூட்டணி சட்டப்பேரவையில் நீண்ட காலம் நீடிக்கவில்லை. பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து 2011 ஆம் ஆண்டிலேயே விஜயகாந்த் சட்டப்பேரவையில் கேள்விகளை எழுப்பினார். நாக்கை கடித்து சட்டசபையில் விஜயகாந்த் கோபம் அடைந்தது.. அதை ஜெயலலிதா அருவருப்பான விஷயம் என்று குறிப்பிட்டது பெரிய அளவில் கவனம் பெற்றது.

இந்தக் கேள்விகள் அ.தி.மு.க.வுக்கும் தேமுதிகவுக்கும் இடையே மோதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து, தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்த நிகழ்வுகளும் அரங்கேறின. கிட்டத்தட்ட 8க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தேமுதிகவை விட்டு வெளியேறி அதிமுகவில் இணைந்தனர். இதனால் தேமுதிக மொத்தமாக முறிந்தது.

எடப்பாடி தவெக பிளான்

இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் உதவியின் மூலம் மீண்டும் முதல்வராகலாம் என்று எடப்பாடி திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா - விஜயகாந்த் செய்த மேஜிக்கை மீண்டும் செய்யலாம் என்று எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே பாணியில் விஜயை எதிர்க்கட்சி தலைவராக்கலாம்.. திமுகவிற்கு எதிர்க்கட்சி கூட கிடைக்காமல் பார்த்துக்கொள்ளலாம் என்று எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை விஜய் எதிர்காலத்தில் அதிமுகவிற்கு எதிராக திரும்பினால்.. ஜெயலலிதா தேமுதிகவை உடைத்தது போல.. தவெகவை உடைக்கும் எல்லைக்கும் கூட எடப்பாடி பழனிசாமி செல்லலாம் என்றே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+