நேற்று இரட்டை தலைமை.. இன்று ஒற்றைத் தலைமை.. நாளை கூட்டுத் தலைமையா.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
சென்னை: அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டப்பட்டாரா என்ற கேள்வி தஞ்சையில் வைக்கப்பட்டுள்ள பேனர் மூலம் முன்வைக்கப்படுகிறது.
அதிமுகவில் இரு தலைவர்களுக்கிடையே பெரும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என பிரிந்து பரஸ்பரம் இரு ஆதரவாளர்களும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக் கொள்கிறார்கள்.
இவர்களில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆர் பி உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டோரும், ஓபிஎஸ் அணியில் புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பயங்கர வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுக் குழு
அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதன் தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வரும் என தெரிகிறது. ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு என்பதால் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து விலகி சிலர் ஓபிஎஸ் பக்கம் தாவி வருகிறார்கள்.

கோவை மாவட்டம்
இந்த மாதம் கோவை மாவட்டத்தில் பிரம்மாண்ட மாநாட்டுக்கு ஓபிஎஸ் தரப்பு ஏற்பாடு செய்துள்ளது. அந்த மாநாட்டின் போது 25 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவிக்க தயார் என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகிய 3 பேரும் திரைமறைவில் கூட்டணியாக இயங்குகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வீட்டு திருமணம்
இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற ஓபிஎஸ் ஆதரவாளர் இலல திருமண விழாவைொயொடடி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் எடப்பாடி பழனிசாமியின் படம் இல்லாமல் உள்ளது. அந்த பேனரில் அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா, தினகரன், ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் படங்கள் இடம்பெற்றுள்ளன.

கூட்டுத் தலைமைகளே
அதில் கூட்டுத் தலைமைகளே வருக வருக என குறிப்பிட்டுள்ளது. அதாவது அதிமுக பொதுக் குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். அது போல் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் நீக்கினார். இதையடுதது இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை ஓபிஎஸ் நியமித்தார்.

ஓரங்கட்டப்படுகிறாரா இபிஎஸ்
இதை முன்வைத்துதான கூட்டுத் தலைமைகளே என ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோரை அழைத்துள்ளார்கள். ஆனால் உயர்நீதிமன்ற தீரப்பின்படி ஜூன் 23 ஆம் தேதி முந்தைய நிலையே தொடரும் என்பதால் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். ஆனால் அவர் ஓபிஎஸ்ஸுடன் ஒத்து வராததால் இப்படியொரு பேனர் மூலம் ஒத்து வராவிட்டால் "உங்கள் பொறுப்பு மாறும்" என ஓபிஎஸ் தரப்பினர் சொல்லாமல் சொல்லியுள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications