10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்? கனமழை பாதிப்புக்கு எடப்பாடி தான் காரணம்.. கொதிக்கும் அமைச்சர் அன்பரசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஆட்சியில் மழைநீர் தேங்கியதற்கு திமுகவே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகாலுக்காக என்ன பணிகள் செய்யப்பட்டது என்று அமைச்சர் அன்பரசன் கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்லாமல் சென்னை கனமழை பாதிப்பிற்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் கனமழையால் தேங்கிய பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, மழைநீர் வடிகால் பணிகளை திமுக அவசர அவசரமாக அமைத்து வருகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நிதி ஆதாரங்களை வைத்து, திட்டத்தின் பெயரை மாற்றி திமுக சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல் 2006 - 2011 வரை சென்னையில் எந்தப் பணிகளையும் திமுக செய்யவில்லை என்று விமர்சித்தார்.

இபிஎஸ் தான் காரணம்

இபிஎஸ் தான் காரணம்

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில். சென்னை புறநகர் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். 2006 - 2011ம் ஆண்டு கால திமுக ஆட்சியில் போரூர் ஏரியில் இருந்து காலவாய் அமைத்து நீரை வெளியேற்ற திட்டம் போடப்பட்டு செயல்படுத்தினோம்.

10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி

10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி

2016 -2021ம் ஆட்சிக்காலத்தில் நான்கு ஆண்டுகள் இந்த திட்டத்தை செயல்படுத்த சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செவி சாய்க்காதது தான் இன்றைய நிலைக்கு காரணம். அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருந்தால் ஏன் இந்த நிலை இன்று ஏற்பட்டு இருக்க போகிறது.

நிரந்திர தீர்வு

நிரந்திர தீர்வு

ஒவ்வொரு ஆண்டும் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண ரூ.120 கோடி மதிப்பில் வடிகால் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகிறது. மழைநீர் சூழ்ந்த பகுதிகளில், இப்போது பெரும்பாலான இடங்களில் தண்ணீர் இல்லை. சில இடங்களில் மட்டும் தான் உள்ளது. மழைநீர் தேங்கி உள்ள பகுதி மக்கள் வசதி படைத்தவர்கள். அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் மற்றும் நிவாரண உதவிகள் வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

35 இடங்களில் ராட்சத மோட்டார்கள்

35 இடங்களில் ராட்சத மோட்டார்கள்

சிலருக்கு மட்டுமே உதவிகள் தேவைப்படுகிறது. அவர்களுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகள், கால்வாய்களில், குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் இருந்தன. அவை தற்போது அகற்றப்பட்டுள்ளது. கால்வாயில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் ஊருக்குள் இருக்கும் தண்ணீர் வெளியேறுவதில் சிரமம் உள்ளது. அவற்றை வெளியேற்ற 35 இடங்களில் மொத்தம் ராட்சத மோட்டார்கள் வைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விரைவில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படும்.

ஒரு சொட்டு நீர் தேங்காது

ஒரு சொட்டு நீர் தேங்காது

இந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்டுள்ள கணேசபுரம், திருவள்ளுவர் நகர் போன்ற இடங்களில், அடுத்த ஆண்டு ஒரு சொட்டு நீரும் தேங்காமல் விரைவாக வெளியேறும் வகையில் பணிகள் செய்யப்படும். மக்கள் மழைநீர் தேக்கத்தால் பாதிக்காத வகையில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+