புஸ்ஸூனு போச்சே.. எடப்பாடி பழனிசாமி "கொடி" பறக்குதா? அப்ப பாஜகவுக்கு வேற வழியேயில்லையா? புது தலைவலி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பசும்பொன் வருகையானது, மிகப்பெரிய அதிர்வுகளை அதிமுக, பாஜக தரப்பில் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான விவாதங்களும், கருத்துக்களும் சோஷியல் மீடியாவை வட்டமடிக்க துவங்கி உள்ளன.
எடப்பாடி பழனிசாமியின் கடந்த ஆட்சி காலத்திலிருந்தே, கொங்கு கோட்டையாக "அதிமுக" சுருங்கிவிட்டதாக ஒரு பேச்சு நிலவியபடியே உள்ளது.. அதற்கேற்றவாறு, சசிகலா, தினகரன், ஓபிஎஸ் போன்றோரை கட்சியிலிருந்தே தூக்கியெறிந்துவிடவும், முக்குலத்தோர் மக்களின் கோபத்தையும் எடப்பாடி பழனிசாமி, ஒரேயடியாக சம்பாதித்து கொள்ள நேரிட்டதை மறுக்க முடியாது.

இதற்கு நடுவில், வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் சேர்ந்து கொண்டதால், அந்த கோபம் இன்றுவரை எடப்பாடி மீது எதிரொலித்தவாறே உள்ளது. இதைத்தான், பசும்பொன்னில் நடந்த நிகழ்வும் தமிழகத்துக்கு எடுத்துக்காட்டி உள்ளது.
பசும்பொன்: "தேர்தல் ஆதாயத்திற்காக வர வேண்டாம், பசும்பொன்னில் இருந்து வெளியேறுங்கள், எடப்பாடி பழனிசாமி ஒழிக, இபிஎஸ் ஒழிக, சசிகலாவை ஏமாற்றிய எடப்பாடி, தேவர் வாக்கை பெற வந்த எடப்பாடி" போன்ற முழக்கங்களும் எடப்பாடி பழனிசாமியை பசும்பொன்னிலிருந்து கிளம்பும்வரை விடாமல் துரத்தி துரத்தி வந்தன.
ஓபிஎஸ், தினகரன், சசிகலா இந்த 3 பேரின் ஆதரவும் இல்லாமல், தன்னால் தென்மண்டலங்களிலும் வெற்றி பெற முடியும் என்பதை மேலிட பாஜகவுக்கு உணர்த்தவே, கடந்த ஒரு வருட காலமாகவே, எடப்பாடி பழனிசாமி பலவித முயற்சிகளை எடுத்து வந்ததாக சொல்லப்பட்டது. எனினும், அத்தனையும் தோல்வியையே தந்துள்ளதாக தெரிகிறது.
பாஜக மேலிடம்: இந்த நிகழ்வுகளையெல்லாம் பாஜக, கவனிக்காமல் இல்லை. அதனால்தான், ஆரம்பத்திலிருந்தே, "ஒருங்கிணைந்த அதிமுக" என்ற விஷயத்தில் உறுதியாக இருந்து வருகிறது. தற்போதைய பசும்பொன் நிகழ்வும் இந்த உறுதியை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.
இப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டிப்புக்கவலை சூழ்ந்துள்ளதாம்.. அதன்படி, தென்மண்டலங்களிலும், அதிமுகவின் கொடியை பறக்கவிட வேண்டும், பாஜகவின் தயவு இல்லாமலும், தேர்தலை வென்றாக வேண்டும் என்பதே அந்த முக்கிய கவலைகளாகும்.
இப்போது, பாஜகவுக்கும் இரட்டிப்புக்கவலை சூழ்ந்துள்ளதாம்.. ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால் மட்டுமே, தென்மாவட்டங்களில் தங்களால் காலூன்ற முடியும், பலம்பொருந்திய திமுகவையும் எதிர்க்க முடியும் என்பதில் கூடுதல் உறுதித்தன்மையை பூண்டுள்ளதாம்.
எடப்பாடி பழனிசாமி: அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் + தினகரனை கழட்டிவிட்டுவிட்டால், தென்மண்டலங்களில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளில், அதிமுக சறுக்கலை சந்திக்க நேரிடும்.. அந்த 15 இடங்களுமே திமுகவுக்கு சாதகமாகிவிடும் என்பதையும் பாஜக உணர்ந்துள்ளது. அதனால்தான், எப்படியாவது எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்து, "ஒருங்கிணைந்த" கூட்டணிக்கான முயற்சியை கையிலெடுக்கும் என்கிறார்கள்.
ஆனால், எடப்பாடியே இதற்கு ஒப்புக் கொண்டுவிட்டாலும்கூட, எடப்பாடி + ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தாலும்கூட, அதிமுகவின் பழைய வாக்கு வங்கி திரும்ப வருமா? என்பதும் சந்தேகம்தானாம். அந்தவகையில், எடப்பாடியின் பசும்பொன் நிகழ்வானது, பலவித யூகங்களையும், குழப்பங்களையும் அரசியல் களத்தில் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன..
தராசு ஷ்யாம்: ஒருமுறை, மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், ஒரு பேட்டியில் சொன்னதை, இப்போது நாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.. "எடப்பாடி பழனிசாமி என்பவர் அகில இந்திய தலைவர் கிடையாது.. தமிழகத்திலேயே வேறு ஏதாவது தொகுதியில் நின்று எடப்பாடி ஜெயிப்பாரா? ஆண்டிப்பட்டியில் எடப்பாடி ஜெயிப்பாரா? மதுரை மேற்கில் நின்று ஜெயிப்பாரா? தர்மபுரியில் ஜெயிப்பாரா? அவர் மாவட்டத்தில் மட்டும் தான் அவரால் ஜெயிக்க முடியும்.. காரணம் இவர் பகுதி தலைவர்..
ஓபிஎஸ்: ஓபிஎஸ்ஸுக்கும் இது பொருந்தும்.. அவரும் சேலத்தில் நின்று ஜெயிக்க முடியாது.. ஆக, இவர்கள் எல்லாருமே பகுதி தலைவர்கள்தான்.. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, தமிழகத்தில் எங்கு நின்றாலும் அவர்களால் வெற்றி பெற முடிந்தது என்றால், அதற்கு காரணம் அவர்கள், அனைவருக்குமான தலைவர்களாக அரவணைத்து செல்லும் தலைவர்களாக இருந்தார்கள்" என்று கூறியிருந்தார்.
ஆக, எடப்பாடியும் சரி, ஓபிஎஸ்ஸும் சரி, அனைவருக்குமான தலைவர்களாக தங்களை உருவாக்கிகொள்வார்களா? அல்லது "அடையாள" அதிமுகவையே மீண்டும் முன்னிறுத்திவிடுவார்களா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications