Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா ஸ்டைலில் எடப்பாடி? "இந்த" ஒரு முடிவை மட்டும் எடுத்தால் தேர்தல் களமே மொத்தமாக மாறியிடும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், இன்று அதிமுக- பாமக கூட்டணி உறுதியாகியுள்ளது. மேலும், கூட்டணியை உறுதி செய்த கையோடு எடப்பாடியும் டெல்லிக்குப் போய் இருக்கிறார். கூட்டணி முடிவுகளில் அவசரம் காட்டப்படுவது ஏன் என்பதை விளக்கியுள்ள மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம், அடுத்த ஓரிரு நாட்களில் அதிமுக கூட்டணியில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இன்றைய தினம் தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபர மாற்றங்கள் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டணியை இறுதி செய்தார். சமீபத்தில் தான் அமித் ஷாவும், பியூஷ் கோயலும் தமிழகம் வந்து சென்றிருந்த நிலையில், இந்தக் கூட்டணி இறுதியாகியுள்ளது.

Edappadi Palanisamy might choose to contest fewer seats than last election says Tharasu Shyam

எடப்பாடி தயக்கம்

இதற்கிடையே வரும் நாட்களில் அதிமுக கூட்டணியில் பல முக்கிய மாற்றங்கள் நடக்கும் எனக் கூறியுள்ளார் மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம்! இது தொடர்பாக அவர் புதிய தலைமுறை டிவிக்கு அளித்த பேட்டியில், "டிடிவி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் நிலை தான் என்னவென்று தெரியாமல் இருக்கிறது. அவர்களைக் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சி இருந்தாலும், எடப்பாடி அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தாலும், உள்ளுக்குள் அவரிடம் ஒரு சிறு தயக்கம் இருக்கிறது. அதை நம்மால் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

கடந்த 2021 தேர்தலில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்டனர். ஆனால், இந்த முறை அவ்வளவு இடம் கிடைக்காது. 15 முதல் 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அதன்படி பார்த்தால் பாஜக மற்றும் பாமகவுக்கு 45 தொகுதிகள் போய்விடும். அதிமுக குறைந்தது 160ல் நிற்க வேண்டும். எனவே, மீதி தொகுதிகளை அதிமுக மிற கட்சிகளுக்குப் பிரித்துத் தர வேண்டும். ஏற்கனவே இருக்கும் கட்சிகள் தான் என்பதால் அதில் பெரிய குழப்பம் வராது.

சிறு குழப்பம்

தேமுதிகவில் மட்டும் குழப்பம் இருக்கும். அவர்கள் நிலைப்பாடு இதுவரை தெரியாது. அவர்கள் அதிக இடங்களைக் கேட்பார்கள். மேலும், ராஜ்யசபா இடத்தையும் கேட்பார்கள். ஏப்ரல் மாதம் 6 ராஜ்யசபா இடங்கள் காலியாகும். அதை எப்படி நிரப்பப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒருவேளை மேற்கு வங்கத்தின் முதற் கட்டத்தோடு இணைத்து மார்ச் மாதமே தேர்தல் நடந்தால் தமிழகச் சட்டசபைத் தேர்தல் நடந்தால் ராஜ்யசபா தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை. புதிய சட்டசபை அமைந்த பிறகே அது தெளிவாகும்.

அவசரம் காட்டும் அமித் ஷா

தற்போதுள்ள சூழலில் இந்த 6ல் 4 இடங்கள் ஈஸியாக திமுகவுக்கு போகும். போட்டி வேட்பாளரை நிறுத்தினால் 5வது இடமும் போகும். அதைத் தவிர்க்கவே அமித் ஷா அவசரம் காட்டுகிறார். அதுவே அவரது வியூகம்! இதன் காரணமாகவே கூட்டணி முடிவுகள் எல்லாமே அவச அவசரமாக இறுதியாகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுகவில் வேறு எந்த கட்சிகள் இடம்பெறும் என்பது தெரிந்துவிடும். தேமுதிகவை தவிர மற்ற கட்சிகளின் நிலைமை தெளிவாகத் தெரிந்துவிடும்.

ஜெயலலிதா ஸ்டைலில் எடப்பாடி?

இந்தக் கூட்டணிகள் மூலம் சுமார் 35% வாக்குகளை அதிமுக கூட்டணி உறுதி செய்கிறது. இப்போது திமுக கூட்டணி 40-42% வாக்குகளை ஆவரேஜ் செய்யும் நிலையில், அதற்குப் போட்டியாக அதிமுக இறங்கி இருக்கிறது.. ஓபிஎஸ், டிடிவி இல்லாமலேயே இதைச் செய்துள்ளனர். அதிலும் இப்போது டிடிவியிடம் மனமாற்றம் தெரிகிறது. தேர்தல் நேரத்தில் துரோகி எல்லாம் பார்க்க வேண்டியது இல்லை என்கிறார். எனவே, அவரும் கூட இந்தக் கூட்டணிக்குள் வரலாம்!

இப்படிக் கூட்டணி அமைந்தால் அதிமுக சமரசம் செய்ய வேண்டிய சூழல் வரும் 150- 145 இடங்களில் மட்டுமே போட்டியிட வேண்டிய சூழல் வரும். 2001ல் ஜெயலலிதா மிகக் குறைவாக 144 இடங்களிலேயே போட்டியிட்டார். அதேபோன்ற ஒரு முடிவை எடப்பாடி பழனிசாமி எடுக்க வேண்டி இருக்கும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+