இதென்ன புது மேட்டர்? ‘செலவு அதிகம்’ - சுப்ரீம் கோர்ட்டில் பற்றவைத்த எடப்பாடி.. 378 பக்கங்கள்.. பரபர!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடுகள் எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது என எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
கட்சியின் தலைமைப் பதவியில் இருவர் இருக்கும்போது மாவட்டங்களுக்கு தனித்தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டால் வரவேற்பு செலவுகள் அதிகமாவதாக மாவட்டச் செயலாளர்கள் கூறியதாலேயே ஒற்றைத் தலைமை முழக்கம் எழுந்ததாக ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவைச் செயல்படுத்தினால் அது கட்சியின் ஜனநாயகத்தையே சீர்குலைக்கும் என எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெர்விக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுக்குழுவுக்கு எழுந்த சிக்கல்
அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்ட நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜூன் 22ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், ஜூன் 23ல் பொதுக்குழு நடத்த தடையில்லை என உத்தரவிடப்பட்டது. பின்னர் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்து விடியவிடிய நடந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம் பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவித்து வேறு புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டது.

மீண்டும் பொதுக்குழு
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பின்னடவை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டபடி ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், அதுகுறித்து மேடையிலேயே எடப்பாடி ஆதரவாளர்கள் பேசினர். மேலும், ஓ.பன்னீர்செல்வம், ஈபிஎஸ் ஆதரவாளர்களால் அவமதிக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ல் நடைபெற உள்ளதாக ஈபிஎஸ் தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் ஆகியோர் சார்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எடப்பாடி பழனிசாமி டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்பதை அறிந்தே அதற்கு முன்னதாகவே ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

378 பக்கங்கள் கொண்ட மனு
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் 378 பக்கங்கள் கொண்ட மனுவை தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்துள்ள 378 பக்கங்கள் கொண்ட மனுவில் ஓ.பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார். இரண்டு நீதிபதிகள் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அதிமுக உரிமைக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆருக்கு எதிராக
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடுகள் உள்ளன. கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கு எதிராகவும் அதிமுக உருவாக்கப்பட்டதற்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். அதிமுக விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்துக்குட்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவு அதிகமாகிறது
மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுடனான கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உச்ச பதவியில் இருவர் இருக்கும்போது மாவட்டங்களுக்கு தனித்தனியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டால் வரவேற்பு செலவுகள் அதிகமாவதாக மாவட்டச் செயலாளர்கள் கூறியதாகவும் எனவே ஒற்றைத் தலைமையே வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கூறினர் என்றும் அதுவே பொதுக்குழு கூட்டத்தில் பிரதிபலிக்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமியின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ஜனநாயகத்தையே சீர்குலைக்கும்
மேலும், எதிர்மனுதாரருக்கு வீட்டோ அதிகாரம் தருவது போல் கட்சித் தலைமை பற்றி விவாதிக்கக் கூடாது என்ற ஆணை உள்ளது. அதிமுகவின் ஜனநாயக அமைப்பு முறையில் தலையிடுவது போல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவைச் செயல்படுத்தினால் அது கட்சியின் ஜனநாயகத்தையே சீர்குலைக்கும் என எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் தெர்விக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications