ஆ.ராசா சொன்ன அந்த வார்த்தை.. ஸ்டாலின் குடும்பத்திற்கும் பொருந்துமா? - எடப்பாடி பழனிசாமி பரபர பேச்சு!
சென்னை : ஆ.ராசா சொன்ன வார்த்தை, ஸ்டாலின் குடும்பத்திற்கும் பொருந்துமா என மக்கள் கேட்கின்றனர் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. "நீ இந்துவாக இருக்கிற வரை சூத்திரன். இந்துவாக நீ இருக்கிற வரை தீண்டத்தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?" என்று பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து, காவல்துறையிலும் புகார் அளித்துள்ள நிலையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சீனில் வந்துள்ளார்.
இன்று சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், ஆ.ராசாவின் பேச்சை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஆ.ராசா பேச்சு
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி, உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. "நீ இந்துவாக இருக்கிற வரை சூத்திரன், சூத்திரனாக இருக்கிற வரை பஞ்சவன். இந்துவாக நீ இருக்கிற வரை தீண்டத்தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்." என்று பேசி இருந்தார். ஆ.ராசாவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடும் சர்ச்சை
இந்த விவகாரம் கடும் சர்ச்சைக்குள்ளான நிலையில், ஆ.ராசா தனது ட்விட்டர் பக்கத்தில், "சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, கோயில் நுழைவு மறுக்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் அதிகாரத்தாலும், பரப்புரையாலும் 90 சதவீத இந்து மக்களின் உரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்? என்றும் பதிவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
இதைத் தொடர்ந்து ஆ.ராசாவின் கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஆ.ராசாவின் பேச்சை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஸ்டாலின் குடும்பத்திற்கும் பொருந்துமா ?
சென்னை வடபழனியில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், இந்துக்கள் குறித்த ஆ.ராசாவின் பேச்சை கடுமையாக விமர்சித்தார். மேலும், ஆ.ராசா சொன்ன வார்த்தை, ஸ்டாலின் குடும்பத்திற்கும் பொருந்துமா என மக்கள் கேட்கின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications