Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மாகிட்ட இப்படி பேசுவீங்களா? கடுப்பான எடப்பாடி.. இதை எல்லாம் சொல்லாதீங்க.. வீறிட்டு எழுந்த மா.செ

Subscribe to Oneindia Tamil

எடப்பாடி : அதிமுகவில் உள்ள பல மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி கட்டுப்பாட்டில் இல்லை. அரசுக்கு எதிரான மனநிலை இருந்தும் கூட பல மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம் இல்லை. சமீபத்தில் நடந்த கூட்டத்தில் தென் மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக புகார் வைத்துள்ளார். திருச்சியில் உள்ளவர்கள் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி உள்ளனர், என்று மூத்த பத்திரிகையாளர் துரை கருணா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் அவர் சில மாவட்ட செயலாளர்களை கடுமையாக கண்டித்து உள்ளார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் துரை கருணா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

( பௌன்சர்கள் அட்டூழியம் அதிகமாகிடுச்சு.. புஸ்ஸி ஆனந்திடம் விசாரித்த விஜய்.. ஆனால்.. பெரிய சிக்கல் )

அதில், அதிமுகவில் யாரையும் எடப்பாடியால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் மீது மாவட்ட செயலாளர்களுக்கு பயம் இல்லை. ஜெயலலிதா காலத்தில் அவர் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார். ஆனால் எடப்பாடி அப்படி இல்லை. மாவட்ட செயலாளர்கள் யாரும் எடப்பாடி மீது அச்சம் இல்லை. சிலரை தூக்கினால் சிக்கல் ஆகிவிடும் என்று எடப்பாடியும் பயப்படுகிறார். சாதாரண கிளை செயலாளரை கூட எடப்பாடியால் தூக்க முடியாது. அப்படி தூக்கினால் சிக்கல் ஆகும்.

Edappadi Palanisamy rift with District Secretaries in AIADMK getting bigger day by day

எடப்பாடி கோபம்

இப்படி இருந்து கொண்டு எடப்பாடி எப்படி தேர்தலை சந்திக்க முடியும். வலிமையாக இல்லாத ஒருவர் எப்படி தேர்தலை சந்திக்க முடியும். அவரால் யாரையும் தூக்க முடியாது. தூக்கினால் கட்சிக்கு ஆபத்து. அவருக்கும் ஆபத்து என்பது அவருக்கு தெரியும்.

அதிமுகவில் உள்ள பல மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி கட்டுப்பாட்டில் இல்லை. அரசுக்கு எதிரான மனநிலை இருந்தும் கூட பல மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம் இல்லை. சமீபத்தில் நடந்த கூட்டத்தில் தென் மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக புகார் வைத்துள்ளார். திருச்சியில் உள்ளவர்கள் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி உள்ளனர்.

( அசிங்கப்படுத்திய எடப்பாடி? செங்கலை உருவும் செங்கோட்டையன்! எஸ்பி வேலுமணி வீட்டு விசேஷத்தில் இப்படியா? )

என்னிடம் ஆதாரம் உள்ளது. நீங்கள் எப்படி செல்லலாம். நீங்கள் எப்படி திமுகவினர் உடன் தொடர்பில் இருக்கலாம் என்று கேட்டு உள்ளனர். அதிலும் ஒரு மாவட்ட செயலாளரை பார்த்து நீங்கள் திமுக அமைச்சர் ஒருவருடன் அடிக்கடி தொடர்பில் இருப்பதாக கூறி உள்ளார். அவர் சென்னையை சேர்ந்த மாவட்ட செயலாளர்.

எடப்பாடி சண்டை

எடப்பாடி கேட்டதற்கு அந்த மாவட்ட செயலாளர் கோபம் அடைந்து உள்ளார். நீங்கள் அடிக்கடி திமுகவினரை சந்திக்கிறீர்கள் .. எனக்கு புகார் வருது என்றுள்ளார். அதற்கு அந்த மாவட்ட செயலாளர்.. அண்ணே அது பிஸ்னஸ் அண்ணே.. அதை விட்டுவிடுங்கள்.. நீங்கள் கட்சிக்கு என்ன செய்ய சொல்கிறீர்களோ செய்கிறேன்.. செலவு வேண்டுமா செய்கிறேன்.. என்று கூறி உள்ளார். இதை கேட்டு ஷாக்கான எடப்பாடி... இதே பதிலை அம்மா இருந்தால் சொல்வீர்களா? என்று கேட்டு உள்ளார்.

இதை கேட்டு ஷாக்கான மாவட்ட செயலாளர் உடனே சீட்டில் இருந்து எழுந்துவிட்டார். அம்மா பற்றி எல்லாம் இப்போ பேசாதீங்க என்று கோபப்பட்டு சீட்டில் இருந்து எழுந்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம். அப்படி என்றால் எந்த அளவிற்கு எடப்பாடிக்கு பவர் இல்லை என்று பாருங்கள், என்று மூத்த பத்திரிகையாளர் துரை கருணா ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+