"அவர் "அவர்களுக்கு" குறி வைத்தால்.. அவர் "இவர்களுக்கு" குறி வைக்கிறாரே.. படு பரபரப்பில் அதிமுக!

எடப்பாடி பழனிசாமியின் புது வியூகம் ஓபிஎஸ் தரப்பை கலங்க வைத்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ் தன் பலத்தை நிரூபிக்க ஒரு கணக்கு போட்டு வருகிறார் என்றால், எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸையே ஆஃப் செய்யும் அளவுக்கு இன்னொரு மெகா கணக்கை போட்டு வருகிறார்.. இதனால், அதிமுக கூடாரமே பரபரப்பாகி உள்ளது..!

பலமான எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.. அதேசமயம், திமுக ஆட்சியை சரமாரியாக எதுவும் விமர்சிக்காமல், அவ்வப்போது ஏதாவது அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வருகிறார்.

ஆனால், ஓபிஎஸ்ஸோ, ஏதாவது ஒரு கோரிக்கையை வலியுறுத்தி, திமுகவுக்கு அறிக்கை விடுத்து வருகிறார்.. திமுகவுக்கு கோரிக்கை விடுப்பதை தாண்டி, தன்னுடைய பலத்தை கட்சிக்குள் நிலைநிறுத்தும் முயற்சியாகவே இது பார்க்கப்பட்டு வருகிறது.

ஐடியா

ஐடியா

இப்படிப்பட்ட சூழலில்தான், எப்படியும் அதிமுகவை கைப்பற்ற கைவசம் 2 ஐடியாக்களை ஓபிஎஸ் கையில் எடுத்திருப்பதாக செய்திகள் கசிந்தன.. அதன்படி, ஒன்று அதிமுகவை விட்டுச்சென்ற முன்னாள் தலைகள், நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி தன் பக்கம் இழுப்பது. மறுபடியும் இவர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கும்பட்சத்தில் நிச்சயம், கட்சி தலைமையில் மிகப்பெரிய மாற்றத்தை தன்னால் ஏற்படுத்த முடியும் என்று ஓபிஎஸ் நம்புகிறார். மற்றொன்று, சசிகலாவின் ஆதரவை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவது.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஓபிஎஸ்ஸின் திட்டங்களை அறிந்த எடப்பாடி பழனிசாமியோ, அவரும் தன் பங்குக்கு 2 பிளான்களை கையில் எடுத்துள்ளார்.. முதலாவதாக, மாவட்ட செயலாளர்களை குறி வைத்துள்ளார்.. எங்கெல்லாம் அதிமுக தோல்வியடைந்ததோ, அந்த மாவட்டங்களில் தோல்விக்கு அந்தந்த மாவட்ட செயலாளர்களை பொறுப்பேற்கவைத்து பதவி நீக்க வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கனவே அதிமுகவில் இருந்து வருகிறது.

சசிகலா

சசிகலா

ஒருவேளை அவர்களை நீக்கினால் அவர்கள் சசிகலா அல்லது திமுக பக்கம் சாயக்கூடும்.. அதேசமயம், இவர்களை அதிமுகவிலேயே வைத்திருப்பதாலும் பலன் இல்லை.. எனவே, அமமுகவில் இருந்து மூத்த தலைகளை அதிமுகவுக்கு அழைத்து வரும் பணியைதான் இந்த மா.செ.க்களுக்கு தந்துள்ளாராம் ஈபிஎஸ்.. இந்த முறை எடப்பாடி பழனிசாமி, அதிகமாக நம்பியது இந்த மாவட்ட செயலாளர்களைதான்.. இவர்கள் சொல்லித்தான் வேட்பாளர்கள் நியமனமும் பரவலாக நடந்தது..

உத்தரவு

உத்தரவு

ஆனால், ரிசல்ட்டில் எல்லாம் காணாமல் போய்விட்டது.. எனவேதான், வெற்றி வாய்ப்பு இழந்த, அதாவது கொங்கு தவிர்த்த தொகுதிகளில், அமமுகவின் முக்கிய புள்ளிகளை அதிமுகவுக்கு அழைத்து வர வேண்டும் என்ற வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளாராம்.. அமமுக புள்ளிகள் என்றால், நிச்சயம் தென்மண்டலங்களில் அதிகம் என்பதால், அந்த பகுதியில் தங்கள் கவனத்தை செலுத்த தொடங்கிவிட்டார்களாம் மா.செ.க்கள்..!

 கட்சி தலைமை

கட்சி தலைமை

இரண்டாவதாக, கட்சியை இரட்டை தலைமையில்லாமல் ஈபிஎஸ் என்கிற ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளாராம்.. அதற்காக தனக்கு இதுநாள் வரை கூடவே இருந்து வழிநடத்திய அதிகாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி சீக்ரெட் பேச்சுவார்த்தையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. இதைதவிர, அனைத்து மாவட்டங்களிலும் மூத்த நிர்வாகிகளை சரிகட்டும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறதாம்... இதன் பின்னணியில்தான் நிலோபர் கபில் நீக்கமும் நடந்ததாக சொல்கிறார்கள்.

மூவ்

மூவ்

எடப்பாடியின் இந்த மூவ்களை பார்த்துதான், ஓபிஎஸ் தரப்பு மிரண்டு போய் கிடக்கிறதாம்.. அதனால், எதையாவது செய்து, தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துள்ளவர், தன்னுடைய கவனத்தை சசிகலா பக்கம் திருப்பி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+