Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்மகன் உசேன் நியமனம்.. ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்த எடப்பாடி பழனிச்சாமி.. சரியான வியூகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னியாகுமரியை சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு தற்காலிக அவைத் தலைவர் பதவி கொடுத்ததன் மூலம் தென் மண்டலத்தினரை எடப்பாடி பழனிச்சாமி திருப்திப்படுத்தியதோடு சிறுபான்மையின பிரிவினரையும் குளிர்வித்துவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு என்பதை போல் அண்மைக்காலமாக கொங்கு மண்டலம், தென் மண்டலம் என நிர்வாகிகள் பிரிந்து காணப்படுவதாகவே தெரிகிறது.

இதற்கு சிறந்த உதாரணம் சட்டசபை தேர்தல். இந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பறிக் கொடுத்தது. இதில் கொங்கு மண்டலத்தில் திமுக கணிசமான வெற்றியை பெறவில்லை.

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

ஆனால் அதிமுகவோ கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டது. இந்த வெற்றிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று கொங்கு மண்டல நிர்வாகிகளை இயக்கியதே காரணம் என சொல்லப்படுகிறது. அதே போல் ஓபிஎஸ்ஸின் தென் மண்டலம் என வரும்போது இங்கு அதிமுகவால் திமுகவை எதிர்த்து சோபிக்க முடியவில்லை.

பனிப்போர்

பனிப்போர்

அதிமுகவில் இரட்டைத் தலைமைகளுக்கிடையே பனிப்போர் இருந்து வரும் நிலையில் தென் மண்டலத்தில் ஏற்பட்ட தோல்வி கொங்கு மண்டலத்தினருக்கு கூடுதல் பலத்தை கொடுத்தது. கட்சிக்கு பின்னடைவாக இருந்தாலும் இதை வைத்தே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கொங்கு மண்டலத்தினருக்குதான் கொடுக்க வேண்டும் என வாதம் செய்ய ஒரு பிடிப்பை அவர்களுக்கு கொடுத்ததாகவே பார்க்கப்படுகிறது.

வாதம்

வாதம்

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொங்கு மண்டலத்தினருக்குத்தான் கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வாதிட்டதாக தகவல்கள் கூறின. ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் பதவி, இல்லாவிட்டால் அதிமுகவுக்கு எனது ஒற்றை தலைமை ஆகிய இரண்டை வைத்து ஓபிஎஸ் தன் வாதத்தை முன்வைத்ததாகவும் சொல்லப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர்

இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி ஓபிஎஸ்ஸுக்கு வழங்கப்பட்டது. அது போல் கட்சியின் கொறடா பதவியையும் கொங்கு மண்டலத்தினரே எடுத்துக் கொண்டனர். அந்த பதவி எஸ் பி வேலுமணிக்கு சென்றது. இதனால் தென் மண்டலத்தினர் அதிருப்தியில் இருந்தனர்.

தென் மண்டலத்தினர் கலக்கம்

தென் மண்டலத்தினர் கலக்கம்

தென் மண்டலனத்தினர் ஓரம்கட்டப்படுவதாகவே அவர்களுக்குள் மனக்குமுறல் இருந்து வந்த நிலையில் அதை போக்க சசிகலா கட்சிக்குள் வர வேண்டும் என்ற ஒரு குரல் வந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும் தேவர் ஜெயந்தி விழாவின் போது சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். இது எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஓ பன்னீர் செல்வம்

ஓ பன்னீர் செல்வம்

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட சசிகலாவுக்கான ஆதரவு குரல் ஒலித்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் அறிக்கை வெளியிட்டனர்.

ஓபிஎஸ் அறிவுரை

ஓபிஎஸ் அறிவுரை

ஏற்கெனவே தென் மண்டலத்தினரின் அதிருப்தியை பெற்ற எடப்பாடி பழனிச்சாமி, அன்வர் ராஜா நீக்கத்தால் சிறுபான்மையினரின் செல்வாக்கையும் இழக்கும் நிலை இருப்பதை ஓபிஎஸ் சுட்டிக் காட்டினார். எனவே அவைத் தலைவர் பதவி யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம், கொங்கு மண்டலத்தினருக்கு கூட கொடுங்கள், ஆனால் சிறுபான்மையினருக்கு கொடுத்தால் கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என ஓபிஎஸ் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

தற்காலிக அவைத் தலைவர்

தற்காலிக அவைத் தலைவர்

இதையடுத்து இன்றைய தினம் தமிழ்மகன் உசேனை தற்காலிக அவைத் தலைவர் பதவியில் நியமித்து முன்மொழிந்ததுதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. ஒன்று, தமிழ் மகன் உசேன் தென் மாவட்டத்துக்காரர். இதனால் அந்த மாவட்டத்து நிர்வாகிகளின் கோபத்தை தணித்ததாக பார்க்கப்படுகிறது. இரண்டாவது- அன்வர் ராஜாவை நீக்கியதால் சிறுபான்மை பிரிவினரின் ஆதரவையும் வாக்குகளையும் இழக்காமல் இருக்க உசேனை நியமித்தது. மூன்றாவது எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுக என்றும் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் போதிலும் ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் சொல்லப்பட்டு வந்தது.

ஓபிஎஸ் சாய்ஸ்

ஓபிஎஸ் சாய்ஸ்

இந்த நிலையில் ஓபிஎஸ் விரும்பியதை போலவே தற்காலிக அவைத் தலைவர் பதவியை சிறுபான்மையின பிரிவை சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு வழங்கியதன் மூலம் ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதையும் எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்துவிட்டதாகவே சொல்லப்படுகிறது. ஆனால் சிறுபான்மையினரில் ஓபிஎஸ்ஸின் சாய்ஸ் ஜேசிடி பிரபாகரனாக இருந்ததாம். இவர் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர். ஆனால் தமிழ்மகன் உசேன் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர். ஓபிஎஸ் பரிந்துரைத்தது போல் தற்காலிக அவைத் தலைவர் பதவியை சிறுபான்மையினருக்கு எடப்பாடி பழனிச்சாமி கொடுத்திருந்தாலும் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான நியமனத்தில் ஓபிஎஸ்ஸின் பேச்சு எடுபடவில்லை என்பது அவரது ஆதரவாளர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

Recommended Video

    அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கை - ஜெயக்குமார்
    ஓபிஎஸ் சாய்ஸ்

    ஓபிஎஸ் சாய்ஸ்

    அந்த வகையில் தற்காலிக அவைத் தலைவர் பதவிக்கு அன்வர் ராஜா, தமிழ்மகன் உசேன் ஆகிய இருவரை ஓபிஎஸ் பரிந்துரைத்திருந்தார். அன்வர் ராஜா நீக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் பரிந்துரைத்தது போல் தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதையும் எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்துவிட்டதாகவே சொல்லப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+