எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா உறுதி!
சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அண்மைக்காலமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில் பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் சபாநாயகர் தனபாலுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 23 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் நடந்த ஆலோசனைகளிலும் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்தார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராதா கிரீன்வேஸ் சாலை இல்லத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.
அதிமுகவில் பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுக் குழுவில் கலந்து கொண்ட கடம்பூர் ராஜுவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதால் அதை காரணம் காட்டி வரும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக் குழுவை ஒத்தி வைக்க ஓபிஎஸ் தரப்பு முயற்சித்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications