Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர்களையும் முதல்வரையும் பேச விட்டாதானே! சபாநாயகரே குறுக்கே புகுந்து ஆஃப் செய்றாரு.. எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சபாநாயகர் தனக்கான மரபை கடைப்பிடிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அப்போது சபாநாயகர் உரிய பதில் தரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் அவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Edappadi palanisamy says that Speaker is not acting as per rules of assembly

இதையடுத்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். வெளியே வந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: இன்றைய தினம் சட்டசபையில் பேரவைத் தலைவரிடம் அதிமுக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நியமனம் குறித்தும் அதிமுகவிலிருந்து 3 சட்டசபை உறுப்பினர்களை நீக்கியதும் குறித்தும் பலமுறை நேரில் சந்தித்து மூத்த எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்தனர்.

ஆயினும் அவர் அதற்கான தீர்வை காணாத காரணத்தினால் அதுகுறித்து சட்டசபையில் அவருடைய கவனத்திற்கு கொண்டு வந்தோம். கிட்டதட்ட எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நியமனம் குறித்தும் 3 எம்எல்ஏக்கள் அதிமுகவிலிருந்து நீக்கம் குறித்தும் 10 முறை சட்டசபை தலைவருடைய அறையில் கடிதம் கொடுத்துள்ளோம்.

19.7.2022 அன்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கடிதம் குறித்து கடிதம் கொடுத்திருக்கிறோம். 11.10.2022 அன்றும் கொடுத்துள்ளோம், நினைவூட்டல் கடிதத்தை 14.10.2022, 18.10.2022, 10.1.2023 அன்று கொடுத்துள்ளோம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினுடைய நகலை 23.02.2023 அன்று சட்டசபை தலைவருடைய அறையில் சமர்ப்பித்துள்ளோம்.

28.3.2023 தேதியிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலையும் கொடுத்துள்ளோம். 25.8. 2023 சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை கொடுத்துள்ளோம். 21.9.2023 அன்று நினைவூட்டல் கடிதத்தை கொடுத்திருக்கிறோம். 9.10.2023 அன்று மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதத்தை கொடுத்திருக்கிறோம்.

10 முறை கடிதம் கொடுத்தும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இன்றைய தினம் கூட எங்கள் கொறடா, எம்எல்ஏக்கள் அனைவரும் போய் சபாநாயகரை சந்தித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக கேட்டோம். ஆனால் சபாநாயகர் பதில் தரவில்லை. எனவே இதுகுறித்து நான் சட்டசபையில் பேசினேன். ஆனால் அதை முழுமையாக பேசுவதற்கு எனக்கு அனுமதி கொடுக்கவில்லை.

வெறும் 18 எம்எல்ஏக்கள் இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சிக்கு கூட காங்கிரஸ் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் இருவரும் சேர்ந்துதான் உட்கார்ந்து இருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு மட்டும் சபாநாயகர் சட்டசபை மரபை கடைப்பிடிக்கவில்லை. தனக்கென தனிப்பட்ட அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கிறார். நாங்கள் அதில் குறுக்கிடவில்லை. எந்த உறுப்பினரை எந்த இடத்தில் அமர வைக்க வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை.

Edappadi palanisamy says that Speaker is not acting as per rules of assembly

இருந்தாலும் காலம் காலமாக எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் அருகருகேதான் அமர வேண்டும். இதுவரை எங்கள் கட்சிக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவரை நியமனம் செய்யவும் இல்லை, அருகருகே உட்கார வைக்கவும் இல்லை. சபாநாயகர் அமர்ந்திருக்கும் ஆசனம் புனிதமான ஆசனம், அதில் அவர் அமர்ந்து நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றுதான் நாங்கள் வற்புறுத்தினோம்.

அது போல் நானும் எங்கள் உறுப்பினர்களும் ஏதாவது கேள்வி எழுப்பினால் அதற்கு துறை அமைச்சரையோ முதல்வரையோ பதில் அளிக்க விடாமல் இவரே பதில் அளித்துவிடுகிறார். அதனால் எந்த பிரயோஜனமும் கிடையாது. மக்களுடைய பிரச்சினைகளுக்கு அமைச்சரும் முதல்வரும் பதில் சொல்ல வேண்டும். ஆனால் சபாநாயகரே குறுக்கிட்டு அந்த விஷயத்தை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்து விடுகிறார். இதனால் மக்கள் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. அந்த 3 எம்எல்ஏக்களும் எந்த கட்சியையும் சாராதவர்கள் என அறிவிக்க என்ன இருக்கிறது. அதையும் செய்யவில்லை. நிறைவேற்ற முடியாத காரியத்திற்கு சாக்கு போக்கு சொல்கிறார் சபாநாயகர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+