‘ஆபரேஷன் D’ பியூஷ் கோயலிடம் பேசியது என்ன.. மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதால் அரசியல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். கூட்டணி வியூகம், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன. பியூஷ் கோயலிடம் பேசியது என்ன என்று எடப்பாடி பழனிசாமி பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர். சட்டமன்ற தேர்தலில் இந்தமுறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசியல் களம்
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவை தவிர சொல்லிக் கொள்ளுமளவுக்கு வேறு பெரிய கட்சிகள் இல்லை. ஏற்கனவே பாஜக கூட்டணியில் அங்கம் வகித்திருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டனர்.
இதனால் அதிமுக பாஜக கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே தமிழ்நாடு அரசியலை நேரடியாக கண்காணித்து வருகிறார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா தமிழ்நாடு வந்துள்ளனர்.
பியூஷ் கோயல் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
இந்நிலையில் பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வந்திருந்தார். பின்னர், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தல், கள நிலவரம், செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினோம். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நிலவரங்களை கேட்டறிந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைந்து எப்படி செயல்பட வேண்டும். என்பதை ஆலோசித்தோம். தமிழகம் முழுவதும் மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.
திமுகவை வீழ்த்த வியூகம்
அடுத்த வருடம் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைந்து, மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்கான திட்டங்களில் நாங்கள் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு அதிமுக - பாஜக உள்பட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் செயல்படும். அதிமுக - பாஜக கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியமைக்கும்." என்றார்.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications