இடமே கொடுக்காத எடப்பாடி.. கண்டுகொள்ளாத ஸ்டாலின்.. நிலைமை கைமீறி போகுதே.. கவனிச்சீங்களா?
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் திமுகவிற்கே இடம் கொடுக்காமல் அடித்து வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியின் அரசியலை பெரிதாக கண்டுகொள்வதாக தெரியவில்லை.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். கடந்த 1 வாரத்தில் எடப்பாடி செய்த 4 சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து 4 முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
நடவடிக்கை 1 - வழக்கு: முதல் ஆளாக இந்த விவகாரத்தில் லீகல் டீமை அனுப்பி எடப்பாடி வழக்கு போட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி தொடர்பாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 35 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில், அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் முறையீடு செய்தனர்.
அப்போது அவர்கள், விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
விஷச் சாராய விற்பனை உள்ளாட்சி அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கு தெரியாமல் நடக்காது என்பதால், அவர்களின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தமிழக அரசுத்தரப்பில் வழக்கறிஞர் முனியப்பராஜ், விஷ சாராய விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மதுவிலக்கு துறை அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கை தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதிகள், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தனர்.
நடவடிக்கை 2: முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமி நேரடியாக கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். அங்கே சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு உள்ளார். அதோடு இல்லாமல் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நேற்று போராட்டமும் மேற்கொண்டார்.
திமுக அரசை எதிர்த்து தீவிரமாக போராட்டங்களை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முன்னெடுக்க தொடங்கி உள்ளார்.
நடவடிக்கை 3: இதில் அடுத்த நடவடிக்கையாக இன்று எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரை சந்திக்க உள்ளார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டி, இன்று ஆளுநரை எடப்பாடி சந்திக்க உள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென அரசியல் ரீதியாக வேகம் எடுக்க தொடங்கி உள்ளார். லோக்சபா தேர்தல் 2024 முடியும் வரை பெரிதாக ஆக்டிவாக இல்லாத எடப்பாடி பழனிசாமி தற்போது அடித்து ஆட தொடங்கி உள்ளார்.
நடவடிக்கை 4: சென்னையில் எடப்பாடி உண்ணாவிரதம் செய்து வருகிறார். கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதி மறுத்தது, சபை காவலர்கள் மூலம் சட்டசபையில் இருந்து வெளியேற்றம் செய்து கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள உத்தரவை கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை கண்டித்தும் திமுக அரசுக்கு எதிராக இன்று சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை: ஆனால் ஸ்டாலின் இதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. எடப்பாடி மூலம் செய்யப்படும் விவகாரங்கள் எதையும் ஸ்டாலின் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதுகள் செய்யப்பட்டுவிட்டன. இன்னொரு பக்கம் கள்ளச்சாராயத்தை முடக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்கு இடையில் எடப்பாடி மீது போகஸை திருப்ப வேண்டாம் என்று ஸ்டாலின் எடப்பாடியை பெரிதாக கண்டுகொள்ளாமல் சட்டசபை நிகழ்வுகளில் அவரை பற்றி பேசாமல் உள்ளார்.












Click it and Unblock the Notifications