என்னது.. பாஜக நம்மை கண்ட்ரோல் பண்ணுதா? சட்டென டோனை மாற்றி பேசிய எடப்பாடி.. மிரண்டு போன மா. செக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக நம்மை கட்டுப்படுத்துவதாக சிலர்நினைக்கிறார்கள். நம்மை பாஜக நெருக்கடி கொடுத்து கட்டுப்படுத்தி வருகிறது என்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசி உள்ளார்.

கடந்த வாரம் அதிமுக ஓ பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. போட்டி பொதுக்குழுவை நடத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை செய்தனர்.

இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அலுவலகத்தில் தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

எடப்பாடியிடம் வலியுறுத்திய செயலாளர்கள்

எடப்பாடியிடம் வலியுறுத்திய செயலாளர்கள்

இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றி விவாதிக்கப்பட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவில் மீண்டும் சேர்க்க கூடாது என்று மாவட்ட செயலாளர்கள் ஒருமித்த குரலில் கூறி உள்ளனர். ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் துரோகி. அவரை அதிமுகவில் மீண்டும் அனுமதிக்க கூடாது. அவர் கோர்ட் வரை சென்று அதிமுக விதிகளை மீறிவிட்டார். அதிமுகவை முடக்க பார்த்துவிட்டார். அவர் திமுகவின் பி டீம் போல செயல்படுகிறார். அதனால் அவரை மீண்டும் அதிமுகவில் இணைய அனுமதிக்கவே கூடாது. இதனால் எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவை வழிநடத்த வேண்டும்.

பாஜக கூட்டணி பற்றி ஆலோசனை

பாஜக கூட்டணி பற்றி ஆலோசனை

எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் அதிமுக நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அவர்தான் நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கு முன்னிலை வகிக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் சில நிர்வாகிகள் குறுக்கிட்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க கூடாது. கடந்த இரண்டு தேர்தலில் அதிமுக வென்று இருக்கும். ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் நாம் வெற்றிபெற முடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளனர். இதையடுத்து நிர்வாகிகளுக்கு பதில் அளித்த எடப்பாடி.. கொஞ்சம் கோபமான டோனில்.. கூட்டணி பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதில் நாங்கள் நல்ல முடிவை எடுப்போம்.

பாஜக கட்டுப்படுத்தவில்லை

பாஜக கட்டுப்படுத்தவில்லை

பாஜக நம்மை கட்டுப்படுத்துவதாக சிலர்நினைக்கிறார்கள். நம்மை பாஜக நெருக்கடி கொடுத்து கட்டுப்படுத்தி வருகிறது என்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. பாஜக நம்மை இதற்கு முன்பு கட்டுப்படுத்தியது இல்லை. இப்போதும் கட்டுப்படுத்தியது இல்லை. நாடளுமன்ற தேர்தல்களில் நாம்தான் முடிவு எடுப்போம். என்ன கூட்டணி அமைய வேண்டும் என்று நாம் முடிவு எடுப்போம். நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார் எடப்பாடி. எடப்பாடி இப்படி உறுதியாக பாஜக பற்றி பேசியதை மா.செக்கள் மருண்டபடி பார்த்து கொண்டு இருந்துள்ளனர்.

நிர்வாகிகள் கருத்து

நிர்வாகிகள் கருத்து

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய சில நிர்வாகிகள், நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். அதிமுக தலைமையில் கூட்டணி இருக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். அதிமுகவில் நடக்கும் இந்த தொடர் நிகழ்வுகள், பேச்சுக்கள் காரணமாக எங்கே அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றிவிட முடிவு செய்து இருக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. அதிமுக மெகா கூட்டணி அமைக்க போவதாக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில்தான் தற்போது அதிமுக + பாஜக கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும் என்று கூறினார்.

சண்முகம் என்ன சொன்னார்?

சண்முகம் என்ன சொன்னார்?

இதையடுத்து பேசிய மாஜி அமைச்சர் சிவி , திமுக - பாஜக காட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள். விசிக, கம்யூனிஸ்ட் எல்லாம் இனி திமுகவிற்கு தேவை இல்லை. அவர்களை திமுக கழற்றிவிட போகிறது. திமுகவிற்கு பிரஸர் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒன்று எங்களுடன் கூட்டணி வையுங்கள், இல்லை என்றால் காங்கிரசை கழற்றிவிடுங்கள் என்று பிரஷர் கொடுத்து வருகின்றனர் என்று கூறி இருந்தார். இந்த நிலையில்தான் பாஜக நம்மை கட்டுப்படுத்துவதாக சிலர்நினைக்கிறார்கள். நம்மை பாஜக நெருக்கடி கொடுத்து கட்டுப்படுத்தி வருகிறது என்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை என்று எடப்பாடி கூறி உள்ளார். பாஜக கூட்டணியை முறிப்பது பற்றித்தான் இப்படி எடப்பாடி பேசுகிறாரே என்று அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+