என்ன திமிரா? சீறிய மாஜி.. “அமைதியா இருங்க.. தலைமை பார்த்துக்கும்” - மாசெக்கள் கூட்டத்தில் அட்வைஸ்!?
பாஜக விவகாரம் தொடர்பாக மா.செக்கள் கூட்டத்தில் முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாம்.
சென்னை : அதிமுக சீனியர்கள், பாஜகவையும் அண்ணாமலையையும் காரசாரமாக தாக்கிப் பேசி வரும் நிலையில், இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக விவகாரத்தில் கட்சியினர் அமைதி காக்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு தான் தமிழ்நாடு அரசியலில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு தாவியது அதிமுக - பாஜக இடையே உரசலை அதிகரித்துள்ளது.
பாஜகவினர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததையொட்டி அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையை தாக்கிப் பேசி வருகின்றனர். இதனால் இருதரப்பிலும் வார்த்தை போர் வெடித்துள்ளது.

அதிமுக மாசெக்கள் கூட்டம்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியை முறைப்படி பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாகவும், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றியும் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.

பாஜக கூட்டணி விவகாரம்
இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எப்போது நடத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்துள்ள வழக்கில் உரிய பதில் அளிப்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டணி கட்சியான பாஜகவுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும், இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் பாஜக விவகாரத்தை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரிதுபடுத்தாமல் அமைதி காக்க வேண்டும் என்று நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணிக்குள் சலசலப்பு
தமிழ்நாடு பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.பாஜகவில் இருந்து தான் விலகுவதற்கு காரணம் அண்ணாமலைதான் என்று குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த விவகாரம் அதிமுக - பாஜக இடையே சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக அதிமுக உரசல்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவருக்கு நெருக்கமான அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் அதிமுகவை விமர்சித்திருந்தனர். கோவில்பட்டியில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தனர். பாஜகவினரின் இந்த செயல்களுக்கு அதிமுகவின் முக்கிய தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். இதனால் இரு கட்சிகள் இடையே உரசல் அதிகரித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சிவி சண்முகம் உள்ளிட்டோர் பாஜகவை விமர்சித்துள்ளனர். இதுதொடர்பாகப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சியுடன் உள்ள காரணத்தால், விருப்பப்பட்டு அதிமுகவில் இணைகின்றனர். இதை ஏற்றுக் கொள்கிற பக்குவம் அண்ணாமலைக்கு இருக்க வேண்டும் என்றார்.

திமிர் - சீறிய மாஜி
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், அண்ணாமலை வாய்க் கொழுப்போடு பேசுவதாக தெரிகிறது. மத்தியில் ஆளுகிறோம் என்ற திமிரில் பாஜகவினர் நடந்துகொள்ளக் கூடாது. ஜெயலலிதா உடன் ஒப்பிட்டு பேசுவதற்கு எவனுக்கும் தகுதியே கிடையாது. அதிமுகவினர் பாஜகவில் இணைந்தபோது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணைந்த போது கசக்கிறதா? என்று காட்டமாக விமர்சித்துள்ளார். இதனால், இந்த மோதல் விவகாரம் வளர்ந்துகொண்டே செல்கிறது.

அமைதியா இருங்கப்பா
பாஜக - அதிமுக இடையே உரசல் அதிகரித்து வருவது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும், இதில் அதிமுக தலைவர்கள் ஆவேசமாக பேச வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் ஈபிஎஸ் இருந்து வருவதாகத் தெரிகிறது. இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுகவினர் பாஜக கூட்டணி விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக்கூடாது, அண்ணாமலை பற்றி விமர்சிக்க வேண்டும், பாஜக விவகாரத்தை தலைமை பார்த்துக்கொள்ளும் என முக்கிய நிர்வாகிகள் பேசியதாகக் கூறப்படுகிறது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக?











Click it and Unblock the Notifications