தொகுதி பங்கீடு.. பழனிசாமியுடன் பேசியது என்ன?.. நயினார் நாகேந்திரன் பதில்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்க அதிமுக - பாஜக கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்தார். பிறகு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் ஆகியோர் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்க திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் முட்டி மோதி வருகின்றன. திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்கிற அஜென்டாவுடன் டெல்லி பாஜக களமிறங்கியுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தமிழ்நாடு அரசியல் நிலவரத்தை கண்காணித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமித்ஷா தமிழ்நாடு வந்திருந்தார். அவரை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திருச்சி தனியார் ஹோட்டலில் சந்தித்து உரையடினார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.
அங்கு அவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணியை பலப்படுத்துவது, அதிமுக உள்கட்சி பிரச்சனை, பிரிந்தவர்களை இணைப்பது, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் இறுதியில் தமிழ்நாடு வருகை புரியவுள்ளார். அதற்கு முன்பாக கூட்டணியை இறுதி செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் சந்திப்பு
இதனால் தான் டெல்லி செல்வதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி பாமக கூட்டணியை உறுதி செய்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோருக்கான கதவுகளை மூடிய எடப்பாடி பழனிசாமி, தேமுதிக மற்றும் டிடிவி தினகரனை கூட்டணியில் இணைப்பதற்கு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுக பொதுச்செயலாளர் தினகரன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
அதேநேரத்தில் அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அதிமுகவிடம் 56 தொகுதிகள் மற்றும் 3 அமைச்சர் பதவி கேட்டு பாஜக காய் நகத்துகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் சென்னையில் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. பிரமரின் தமிழக வருகை குறித்து ஆலோசித்தோம் என்றும், பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை பின்னர் கூறுகிறேன் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications