செங்கோட்டையனை இயக்கும் அந்த கை எது தெரியுமா? 30ம் தேதி.. முக்கிய தகவல்களை வெளியிடுகிறார் எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ள செங்கோட்டையன் தொடர்பாக முக்கியமான தகவல் ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிட இருக்கிறாராம்.

முன்பெல்லாம் விஜய் படங்கள் எடுக்கப்படும் முன் படத்தின் ஷூட்டிங் இவர்கள் இணைகிறார்கள்.. அவர்கள் இணைகிறார்கள் என்று புகைப்படங்கள் வரும். இப்போது நடிகர் விஜய்.. அரசியல்வாதி விஜய் ஆகிவிட்டதால்.. அவரின் கட்சியில் இவர் இணைகிறார்.. அவர் இணைகிறார்.. கூட்டணியில் இந்த கட்சி இணைகிறது என்று செய்திகள் வர தொடங்கி உள்ளன. அந்த வகையில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் செங்கோட்டையன் இணைந்தார்.

எம்ஜிஆர் கண்டெடுத்த நிர்வாகியான செங்கோட்டையன்.. இதோ நானே இன்னொரு எம்ஜிஆரை கண்டெடுத்துவிட்டேன் பாருங்கள்.. என்று விஜயை எம்ஜிஆர் போல ஏற்று அவருக்கு கீழ் இணைந்துள்ளார். தனது மகன் வயது விஜயை அண்ணன் என்று அழைக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளார் செங்கோட்டையன். இந்த நிலைக்கு தள்ளியவர் எடப்பாடி!

Edappadi Palanisamy to reveal major things about Sengottaiyan as he joined Vijay TVK

எடப்பாடி செங்கோட்டையன் மோதல்

செங்கோட்டையன் நீண்ட காலமாகவே எடப்பாடி பழனிசாமியை அமைதியாக எதிர்த்து வந்தார். அவரின் பல்வேறு முடிவுகளை கட்சியின் சில கூட்டங்களில் அவர் நேரடியாக எதிர்த்து உள்ளார். ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ந்து 11 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது. இப்படி கட்சியின் தொடர் தோல்வி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் நீக்கப்பட்டது தொடர்பாக செங்கோட்டையன் ஏற்கனவே 5 பேர் கொண்ட குழுவுடன் சென்று எடப்பாடியிடம் செங்கோட்டையன் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

இதற்கெல்லாம் மழுப்பலாக பதில் வரவே.. 10 நாட்கள் உங்களுக்கு டைம் பாஸ் என்று எடப்பாடிக்கு செங்கோட்டையன் டைம் கொடுக்கவே.. உனக்கும் எனக்கும் பேச்சு இல்லை.. என் கையில் வாட்ச் இல்ல.. அதனால் நீங்க கொடுக்குற டைமுக்கு எல்லாம் முடிவு எடுக்க முடியாது என்று எடப்பாடி பிடிவாதமாக இருந்தார். விளைவு செங்கோட்டையன் கோபத்தின் உச்சிக்கே போய் டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை வெளிப்படையாக சந்தித்தார்.

நீக்கிய எடப்பாடி - துணிந்த செங்க்ஸ்

இதை பார்த்து கோபப்பட்ட எடப்பாடி.. செங்கோட்டையன் இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல.. இப்போ நான் செய்வதை பாருங்க என்று கோபப்பட்டு.. அவரை கட்சியில் இருந்தே நீக்கினார். செங்கோட்டையன் உடன் இனி யாரும் அன்னந்தண்ணி புழங்க கூடாது என்று எடப்பாடி உத்தரவிட.. செங்கோட்டையன் மனம் உடைந்து போனார்.

அப்போது குறுக்கே இந்த கவுசிக் வந்தால் என்று விஜயும் சீனுக்குள் வந்து செங்கோட்டையனிடம் இரண்டு மூன்று முறை போனில் பேசி இருக்கிறார். சில வெளிநாட்டு உறவினர்கள் உதவியுடன் நடந்த மீட்டிங்கின் முடிவில் கருப்பு சிவப்பு வெள்ளை துண்டு போட்டவர்.. மஞ்சள் - சிவப்பு துண்டிற்கு மாற ஒப்புக்கொண்டார். கடைசியில் தவெக மாற முடிவெடுத்த செங்கோட்டையன் நேற்று முதல்நாள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேற்று தவெகவில் இணைந்தார்.

எடப்பாடி சபதம்

இப்படிப்பட்ட நிலையில்தான் செங்கோட்டையன் பற்றிய ரகசியத்தை உடைக்க முடிவு செய்துள்ளாராம் எடப்பாடி. கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளார் எடப்பாடி.

இதில் வரும் 30ம் தேதி கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் அவர் பேசுகிறார். அப்போது செங்கோட்டையனை இயக்கும் கை எது? அவர் யார் சொல்லி இப்படி செய்கிறார்? அவர் செய்த தவறுகள் என்னென்ன? முறைகேடுகள் என்னென்ன? செங்கோட்டையன் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன? என்று பல விஷயங்களை வெளிப்படையாக சொல்லி செங்கோட்டையனின் கோட்டையில் உள்ள செங்கல்லை எடுக்க போவதாக எடப்பாடி சபதம் எடுத்துள்ளாராம். 30ம் தேதி அப்படி என்னதான் எடப்பாடி சொல்வார் என்று "ஐ யம் வெயிட்டிங்" மோடில் காத்திருக்கிறாராம்.. விஜய்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+