கருப்புச் சட்டையுடன் களத்தில் குதித்த எடப்பாடி பழனிச்சாமி.. போதை பொருள் பெருகிவிட்டதாக ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி இன்று வலியுறுத்தியுள்ளார்.

போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், முதல்வர் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளார். டிஜிபியிடம் பரிசு பெறுகிறார். இது கண்டிக்கத்தக்கது. ஜாபர்சாதிக் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Edappadi Palanisamy urges Chief Minister Stalin should resign for failing to stop drugs

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பதை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இன்று அதிமுகவின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிப் பகுதிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், இன்று காலை 10 மணியளவில் மனித சங்கிலிப் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் கருப்புச் சட்டையுடன் நடந்த போராட்டத்தில் எடப்பாடி பங்கேற்றார்.

போராட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கூறினார். திமுக பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிகிறது.

போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. பல கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பிடிபட்டு வருகின்றன. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், முதல்வர் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளார். டிஜிபியிடம் பரிசு பெறுகிறார். இது கண்டிக்கத்தக்கது. ஜாபர்சாதிக் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, மனித சங்கிலி போராட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், "திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பலமுறை சட்டசபையில் எடுத்துரைத்ததோடு, பொதுவெளியில் கட்சியின் சார்பில் தொடர்ச்சியான போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள் என்று போதைப் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்பதற்காக அதிமுக தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறது. ஆனாலும், திமுக அரசு இவ்விஷயத்தில் அலட்சியப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் அதிகரிப்பால் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களுடைய வாழ்க்கை பெரிதளவும் பாதிப்படைந்து இருக்கிறது. இதனால், பெற்றோர்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். இந்த போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்காமல் வாய் மூடி, கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது திமுக அரசு. ஏற்கெனவே, தமிழகத்தில் கள்ளச் சாராயத்தால் 26 பேர் பலியாகி, அந்தக் குடும்பங்கள் நிற்கதியாய் நிற்கின்றன.

இதுபோன்று போதைப் பொருள்களின் பழக்கத்துக்கு ஆட்பட்டுப்போய் அதிலிருந்து மீள முடியாமல் இளைஞர்களும், அவர்களுடைய குடும்பமும், உற்றார் உறவினர்களும் வேதனையின் விளிம்பில் இருக்கின்றனர். சுமார் 2,000 கோடி ரூபாய் அளவிலான போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்ட சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் அ. ஜாபர் சாதிக், திமுக அரசின் முதல்வர் மற்றும் அவரது மகனும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி மற்றும் திமுகவைச் சேர்ந்த முன்னணித் தலைவர்களுடனும், முதல்வரின் குடும்பத்தினருடனும் நெருக்கமாய் இருப்பது வெட்கக் கேடு; வேதனையானது.

மேலும், தமிழகக் காவல் துறைத் தலைவர் சங்கர் ஜிவால் ஒரு நிகழ்ச்சியில் மேற்படி ஜாபர் சாதிக்குக்கு பரிசளித்து, பாராட்டுகின்ற புகைப்படங்களும் வெளியாகி இருப்பதிலிருந்து தமிழகக் காவல்துறை எந்த நிலையில் இருக்கிறது என்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

எனவே, திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் போதைப் பொருள்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்திலும், போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகம் தலைகுனிந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்ற வகையில், அதிமுக சார்பில் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.
அதன்படி இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+