டெங்கு பரவுதுங்க.. ஒரு ஆக்ஷனையும் காணோமே.. திமுக அரசை அலர்ட் செய்யும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: டெங்கு பரவலை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் சுகாதார சீர்கேட்டை திமுக அரசு சரிசெய்யவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மதுரவாயல் பகுதியில் 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாகவும் அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் - சோனியா தம்பதியினரின் நான்கு வயது மகன் ரக்ஷன் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். குழந்தையை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாகவும் செய்திகள் வருகின்றன. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சுகாதார சீர்கேட்டை சரி செய்யாத இந்த விடியா திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன், டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications