ஓபிஎஸ் அஸ்திரத்தை எடுத்து.. அவருக்கு எதிராகவே வீசிய எடப்பாடி! கோர்ட்டில் நடந்த செம ட்விஸ்ட்.. போச்சே
அவசர வழக்காக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: உச்ச நீதிமன்ற பொதுக்குழு வழக்கு வாதத்தில், அதிமுகவில் பொதுச்செயலாளர் பொறுப்பை அடிப்படை தொண்டர்களே தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வாதம் வைத்தார். அதே வாதத்தை தற்போது எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராகவே உயர் நீதிமன்றத்தில் பயன்படுத்தி உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். இந்த தேர்தலுக்கு எதிராக இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

அவசர வழக்கு
அவசர வழக்காக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி வைத்த வாதத்தில், பொதுச்செயலர் தேர்தல் நடைபெறுவதில் தவறு இல்லை. இதற்கு முன் கட்சி தேர்தல்கள் நடைபெற்ற போது இதேபோல்தான் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனுக்களை கொடுக்க இதே அளவு கால அவகாசம்தான் கொடுக்கப்பட்டது. கடந்த முறை 2021ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்கள் நடந்தன. அப்போதும் ஞாயிற்றுக்கிழமைதான் வேட்புமனுக்கள் வாங்கப்பட்டன. அதனால் இப்போது ஞாயிற்றுக்கிழமை வேட்புமனுக்களை வாங்குவதில் தவறு இல்லை.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று கூறிவிட்டது. அந்த வழக்கில் விசாரணை நடத்தும் வரை பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்து இருந்தனர். தற்போது அந்த வழக்கு முடிந்துவிட்டது. இதனால் இனியும் வழக்கில் தடை தொடர முடியாது. அதனால் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது சரியானதே. இப்போது தேர்தலுக்கு தடை கோர முடியாது. அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை. அப்போதுதான் கட்சி வலிமையாக இருக்கும்.

அதிமுக அஸ்திவாரம்
மாறாக அதிமுகவின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் சிலர் செயல்படுகிறார்கள். கட்சி விரோத நடவடிக்கைகளில் சிலர் செயல்படுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுகவே மிகவும் முக்கியம். இங்கே தனி நபர் முக்கியம் இல்லை. தனி நபரை விட இயக்கமே பெரியது. ஆனால் இங்கே தனி நபர்களின் நலனுக்காக சிலர் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

அடிப்படை உறுப்பினர்
அடிப்படை உறுப்பினர்களும் கூட ஒற்றை தலைமை வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். அப்போதுதான் கட்சி வலிமையாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். அதிமுகவில் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்புதான் வாதம் வைத்தது. அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை வைத்துவிட்டு இப்போது, அதே வாதத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். தொண்டர்கள் வாக்கு அளிக்கும் தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்.

அஸ்திரம்
இந்த தேர்தலை முடக்க அவர்கள் முயற்சிப்பது ஏன்? இப்போது ஒரு வேட்புமனு பெறப்பட்டு உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்தால் கண்டிப்பாக தேர்தல் நடக்கும். தமிழ்நாடு முழுக்க தேர்தல் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறோம், என்று எடப்பாடி பழனிசாமி வாதம் வைத்தார். முன்பு உச்ச நீதிமன்ற பொதுக்குழு வழக்கு வாதத்தில், அதிமுகவில் பொதுச்செயலாளர் பொறுப்பை அடிப்படை தொண்டர்களே தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வாதம் வைத்தார். அதே வாதத்தை தற்போது எடப்பாடி பழனிசாமி அவருக்கு எதிராகவே பயன்படுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications