சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. இதற்குதானே ஆசைப்பட்டார்.. மிகுந்த உற்சாகத்தில் உள்ளாட்சி தேர்தலை நோக்கி எடப்பாடி

Google Oneindia Tamil News

சென்னை: வேலூர் லோக்சபா தேர்தல் வெற்றி திமுகவுக்கு தோல்விகரமான வெற்றியாகவே அதிமுக தலைமை கருதுகிறது. கடந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்த போது இருந்த மகிழ்ச்சியைவிட இப்போது கிடைத்த வாக்குகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருப்பதாக தெரிகிறது. அதன் காரணமாக விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த முடிந்த 38 தொகுதி லோக்சபா தொகுதி தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த வருத்ததில் இருந்தார். அதனால் எப்படியும் வேலூரில் வெல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

இதற்காக வேலூர் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். பல அமைச்சர்களை தொகுதி பொறுப்பாளர்களாக போட்டு தீவிரமாக வேலை செய்தார்.

 இதுக்கு முடிவே கிடையாதா?.. விஜய், அஜித், சூர்யா.. இப்போது விஜய் சேதுபதியையும் சீண்டும் பாஜக தலைகள்! இதுக்கு முடிவே கிடையாதா?.. விஜய், அஜித், சூர்யா.. இப்போது விஜய் சேதுபதியையும் சீண்டும் பாஜக தலைகள்!

இறுதிவரை ஏற்ற இறக்கம்

இறுதிவரை ஏற்ற இறக்கம்

ஆனால் எதிர்பாராத விதமாக முத்தலாக் மசோதாவும் இரட்டை நிலைப்பாடு எடுத்தவிதம் அதிமுகவை இந்த தேர்தலில் பாதித்ததாக தெரிகிறது. அப்படி இருந்தும் மிகப்பெரிய அளவில் வாக்குகளை பெற்றார் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம். இறுதிவரை நீடித்த ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

வெற்றிக்கோட்டை தவற விட்ட அதிமுக

வெற்றிக்கோட்டை தவற விட்ட அதிமுக

இந்த வெற்றியை திமுக பெரிய அளவில் கொண்டாடினாலும், கடந்த தேர்தல்களை ஒப்பிடும் போது திமுக எதிர்பார்த்த அளவு இந்த வெற்றி இல்லை என்பதே எதார்த்தமான உண்மை. அதேநேரம் அதிமுக கடந்த முறைப்போல் இல்லாமல் வெற்றிக்கு மிக அருகில் தான் தோற்றது.

அதிமுக முன்னேற்றம்

அதிமுக முன்னேற்றம்

இதன் காரணமாகவே தமிழக பாஜக, அதிமுகவின் இந்த தோல்வியை வெற்றிகரமான தோல்வி என்றும், திமுகவின் வெற்றியை தோல்விகரமான வெற்றி என்றும் விமர்சித்துள்ளது கிட்டத்தட்ட இந்த மனநிலையில் தான் அதிமுக தலைமையும் இருக்கிறது. கடந்த முறையைவிட இந்த முறை பெரிய அளவில் வாக்குகள் பெற்றதும், மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றியை அதிமுக கோட்டை விட்டது என்பதையும் அதிமுக நல்ல முன்னேற்றமாக பார்க்கிறது.

விரைவில் உள்ளாட்சி தேர்தல்

விரைவில் உள்ளாட்சி தேர்தல்

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி, இந்த தேர்தல் மூலம் அதிமுகவின் சரிந்து போன செல்வாக்கு மீண்டுவிட்டதாக மகிழ்ச்சியில் உள்ளார். என்னதான் தோற்றாலும் மக்களின் பெருவாரியான ஆதரவு அதிமுகவுக்கு கிடைத்திருப்தால் உற்சாகம் அடைந்துள்ளார். இதன் மூலம் அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் பெரிய வெற்றி பெற முடியும் என நம்புகிறார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

English summary
tamil nadu chief minister edappadi palanisamy very happy to move local body election after vellore loksabha election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X