பாஜக மட்டும் இருந்தால்.. சந்தி சிரிச்சிருக்கும்.. விடாத எடப்பாடி.. "இவர்" என்ன இப்படி சொல்லுறாரே!
அதிமுக உட்கட்சி மோதல் என்பது அடிப்படையில் ஒரு அரசியல் பிரச்சனை. இதற்கு அரசியல் தீர்வு மட்டுமே நிரந்தரமாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
சென்னை: அரசியல் ரீதியாக எடப்பாடியை எதிர்கொள்ள ஓ பன்னீர்செல்வத்திற்கு திராணி இல்லை. அதனால் அவர் நீதிமன்றத்தில் முறையிடுகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம். வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை உடனே கூட்ட முடியாத பட்சத்தில் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனையை பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இடைக்கால உத்தரவு போட்டது.
இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்குப்படி தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்தும், எடப்பாடி, ஓ பன்னீர்செல்வத்தின் மோதல் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் தனது பேட்டியில், கடந்த 3-4 வாரங்களாக நாடகம் நடந்து கொண்டு இருந்தது. உச்ச நீதிமன்றம் இரண்டு பேரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற தொனியில் தீர்ப்பு வழங்கி உள்ளது. இடைக்கால தீர்ப்புதான். ஆனால் இரண்டு பேருமே திருந்துவது போல இல்லை. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த கூத்தாடிகள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். இது அரசியல் பிரச்சனை. இதற்கு கோர்டிற்கு சென்று இருக்கிறார்கள். இதுவே பெரிய பிரச்சனை.

அரசியல் பிரச்சனை
அரசியல் பிரச்சனை, சட்ட பிரச்சனையாக மாறினால் அதற்கு தீர்வு கிடைக்காது. கிடைத்தாலும் நீடிக்காது. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்யுங்கள். ஒன்றாக முடிவு எடுங்கள் என்று கூறி உள்ளனர். அப்படி எப்படி இவர்கள் கூறலாம்? நாம் சொல்ல முடியும்? நம்முடைய ஆசையை நாம் சொல்லலாம். ஆனால் உச்ச நீதிமன்றம் எப்படி சொல்ல முடியும். வலுவான எதிர்கட்சி வேண்டும் என்று நாம் சொல்ல முடியும். ஆனால் நீங்க ஒன்னா இருங்க என்று கோர்ட் எப்படி சொல்ல முடியும். ஏனென்றால் இது அரசியல் பிரச்சனை. அரசியல் பிரச்சனையில் அரசியல் ரீதியாகவே தீர்வு காண வேண்டும்.

அபத்தம்
இந்த தீர்ப்பை அபத்தமாக பார்க்கிறேன். நீங்கள் கோர்ட்டிற்கு போனால் இப்படி எல்லாம் நடக்கும். கோர்ட்டிற்கு போனது இவர்கள். இரண்டு பேரையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கோர்ட் சொன்னால் என்ன நடக்கும்? புருஷன் பொண்டாட்டி பிரச்சனையில் குடும்ப நீதிமன்றம் முடிவு எடுக்க முடியும். அரசியல் மோதலில் இவர்கள் எப்படி முடிவு எடுக்க முடியும். இது அடிப்படையில் ஒரு அரசியல் பிரச்சனை. இதற்கு அரசியல் தீர்வு மட்டுமே நிரந்தரமாக இருக்கும். நீதிமன்ற தீர்ப்பு நிரந்தரமாக இருக்காது. வேண்டும் என்றால் பேண்ட் எய்ட் போடலாம். ஆனால் அது நீண்ட காலம் நிற்காது.

இடைக்கால தீர்ப்பு
இதை இடைக்கால தீர்ப்பு என்கிறார்கள். என்ன விளையாட்டு இது. எடப்பாடி - ஓபிஎஸ் இனி எப்படி ஒன்றாக இருக்க முடியும்? அரசியல் ரீதியாக எடப்பாடியை எதிர்கொள்ள ஓ பன்னீர்செல்வத்திற்கு திராணி இல்லை. அதனால் அவர் நீதிமன்றத்தில் முறையிடுகிறார். அரசியல் ரீதியாக அவருக்கு பலம் இல்லை. அதனால் சட்ட ரீதியாக அவர் மோதுகிறார். இது எல்லாமே அவருக்கு பெரிய பலம் கொடுக்காது. ஒன்றுபட்ட அதிமுக இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதிமுக இல்லை என்றால் தேர்தலில் பாஜக தோல்வி அடையும். ஏன் தேர்தல் தொடங்கும் முன்பே பிரச்சாரத்திலேயே பாஜக சந்தி சிரிக்கும்.

சந்தி சிரிக்கும்
2 சதவிகிதம் வாக்கை வைத்துக்கொண்டு பாஜக என்ன செய்யும். அதனால் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. பாஜக இப்படி நினைப்பது எல்லாம் சுயநலம். அதிமுக ஒன்றாக இருந்தால் நமக்கு ஒன்று இரண்டு சீட்டுகள் கிடைக்கும் என்று அண்ணாமலை, சிடி ரவி நினைக்கிறார். இது அதிமுக உட்கட்சி விவகாரம். இதில் தலையிட அண்ணாமலை யார்? ஓபிஎஸ்ஸும் பாஜகவின் தலையீட்டை அனுமதிக்கிறார். இது என்ன கொடுமை. ஓபிஎஸ் இப்படி பேசலாமா? அவரிடம் கட்சி இல்லை என்பதற்காக பாஜகவின் உதவியை நாடுவது சரியா? எடப்பாடி கையில் கட்சி இருக்கிறது. அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடுவதை எடப்பாடி விரும்பவில்லை. விடவில்லை. இதனால் பாஜகவை வைத்து ஓ பன்னீர்செல்வம் கேம் ஆடுகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications