முடிவுக்கு வரும் பஞ்சாயத்து.. ஓபிஎஸ், டிடிவியை கூட்டணியில் சேர்க்க கிரீன் சிக்னல் கொடுத்த எடப்பாடி?
சென்னை: என்.டி.ஏ கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை இணைக்க பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஓ பன்னீர் செல்வத்துக்கு 3 தொகுதிகளும், டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கவும் எடப்பாடி சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை இணைக்க முடியாது என எடப்பாடி திட்டவட்டமாக கூறியதாகவும் என்.டி.ஏ கூட்டணியில் சேர சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதிமுக பாஜக கூட்டணி
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. கூட்டணிகளை உறுதிப்படுத்துவது, தொகுதிகளை அடையாளம் கண்டு கூட்டணி கட்சிகளுடன் பேசுவது போன்ற பணிகள் திரை மறைவில் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. ஏற்கனவே தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரை மாற்றி விட்டு பியூஸ் கோயல் தலைமையில் 3 மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவை பாஜக மேலிடம் அமைத்து உள்ளது
அதிமுகவில் சேர்க்க முடியாது
தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார். சென்னையில் திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியதாக சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் இருவரையும் கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஓ பன்னீர் செல்வத்திற்கு 3 தொகுதிகளும் டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பாமகவுக்கு 23 தொகுதிகள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி - ராமதாஸ் இருவருக்கும் சேர்த்து 23 தொகுதிகள் கொடுக்க எடப்பாடி பழனிசாமி - பியூஸ் கோயல் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ராமதாஸ், அன்புமணி இருவரையும் சமாதானப்படுத்தும் பொறுப்பை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்று அதிமுக உறுதியளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. பியூஸ் கோயலிடம் அதிமுக தனது முடிவுகளை திட்டவட்டமாக எடுத்துரைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications