அறநிலைய துறை நிதியில் கல்லூரி..கண்ணு, காது, மூக்கு வைச்சு பேசுறாங்க! விமர்சனங்களுக்கு எடப்பாடி பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லூரி அமைப்பது குறித்து விமர்சித்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு பாஜகவின் ஊதுகுழல் போல இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் தனது பேச்சுக்கு கண்ணு, காது, மூக்கு, வைத்து விவாதம் நடப்பதாகவும், அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லூரி கட்டினால் மாணவர்களுக்கு முழு வசதியும் கிடைக்காது என்றே தான் பேசியதாக எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார பயணத்தை துவங்கி இருக்கிறார். முதற்கட்டமாக கோவையில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், பொது மக்களையும் வாக்காளர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாள் மாபெரும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இன்று மாலை, விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திரளான பொதுமக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார்.

Edappadi Palaniswami aiadmk dmk

அப்போது பேசிய அவர், "அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.1700 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பல்கலைக்கழகம், 67 அரசு கலைக் கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால், தற்போது திமுக ஆட்சியில் இந்த அனைத்து திட்டங்களும் முடங்கிக்கொண்டு விட்டன. அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லாத நிலை, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றுகிறது.

விழுப்புரம் கலைக் கல்லூரியில் முதுநிலை பாடநெறிகள் வழங்கப்படாவிட்டால், சி.வி. சண்முகம் தலைமையில் மாபெரும் போராட்டம் நடக்கும். மக்களின் வாக்குகளைப் பெற்றவைகளை மதிக்காத ஆட்சி, வீட்டு வரி, குடிநீர் வரி, குப்பை வரி உயர்வு மூலம் மக்களை சுரண்டி வருகிறார்கள். அரிசி, கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட விலை உயர்வால் மக்கள் வாழ்வாதாரம் சிரமப்படுத்தப்பட்டுள்ளது. தனிநபர் வருமானம் குறைந்துள்ளதே இதற்கு சான்று

அதிமுக ஆட்சி காலத்தில்தான் சிறுபான்மை மக்களுக்கு உண்மையான பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஹஜ் பயண நிதி போன்ற விசயங்களில் கூட அதிமுக அரசின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. மதுரையில் ரூ.200 கோடி வரிப்பணம் முறைகேடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வகை தவறுகளை மக்கள் மறக்கக் கூடாது
கூட்டணிக் கட்சிகளுக்கு எதிர்வரும் 2026 தேர்தலில் ஆதரவு அளிக்கலாம். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

அடிப்படையில் நான் கிராமத்தில் இருந்து வந்தவன். அரசு பள்ளியில் படித்த மாணவன் என்ற முறையில் நானே முடிவு செய்து மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்தேன். ஏழைகளும் மருத்துவராகலாம் என்ற கனவை நிறைவேற்றியது அதிமுக அரசு. அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்து சாதனை படைத்தோம்.

திமுக ஆட்சிக் காலத்தில் ஒரே ஒரு மருத்துவ கல்லூரியை கொண்டுவர முடிந்ததா? மாணவர்கள் நலனை கருதி சொன்னால் கண்ணு காது மூக்கு வைத்து விவாதம் நடக்கிறது. அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லூரி கட்டினால் மாணவர்களுக்கு முழு வசதியும் கிடைக்காது. அறநிலையத் துறையில் இருந்து தான் அதற்கு நிதி ஒதுக்க முடியும். நான் பேசியதை வைத்தே இரண்டு நாளாக விவாதம் நடக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+