அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்!
சென்னை: அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூர் செயலாளர் சீமான் மரைக்காயர், மீனவர் பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் சீனி காதர்மொய்தீன், மீனவர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் பக்கர், மண்டபம் பேரூராட்சி ஐடி பிரிவு இணைச் செயலாளார் ஹமீது அப்துல் ரகுமான் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் அனலாகத் தகித்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 23 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிமுகவினர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வழங்கி வருகின்றனர். கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர், விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர். விருப்ப மனு வழங்கப்பட்டு வருவதால் அதிமுகவினர் தேர்தல் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவர்கள் கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதால் கட்சியில் இருந்து ஈக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நீக்கப்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தலைமைக் கழகம் சார்பில் எடப்பாடி பழனிசாமியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாக ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த KMA. சீமான் மரைக்காயர், (மண்டபம் பேரூராட்சிக் கழகச் செயலாளர்) L. சீனி காதர் மொய்தீன் (மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர், மண்டபம் பேரூராட்சிக் கழக மாவட்டப் பிரதிநிதி) M.A.பக்கர், (மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர்) S. ஹமீது அப்துல் ரகுமான் மரைக்காயர், (மண்டபம் பேரூராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) ஆகியோர், இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சி நிர்வாகிகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்!












Click it and Unblock the Notifications